இப்போல்லாம் வெளிநாடு பரவால்லன்னு இருக்கு, நம்ம ஊர் ரொம்ப மோசம் – கேப்டன் ரோஹித் புலம்பல், காரணம் என்ன?

Rohit
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா 2023 ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்த உள்ளார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் களமிறங்கி தடுமாறிக் கொண்டிருந்த அவர் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்ததை இறுக்கமாக பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டில் நட்சத்திரமாகவும் மேட்ச் வின்னராகவும் ஜொலித்து வருகிறார். அதற்கிடையே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த காரணத்தால் இன்று கேப்டனாக முன்னேறியுள்ள அவர் உழைத்தால் வெற்றி காணலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

இருப்பினும் ஆரம்ப காலங்களில் அதிரடியாக விளையாடியதால் ரசிகர்களால் ஹிட்மேன் என்றழைக்கப்பட்ட அவர் சமீப காலங்களாகவே பெரிய ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். குறிப்பாக தொடக்க வீரராக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி நல்ல துவக்கத்தை பெறும் அவர் முன்பை போல நீண்ட நேரம் நிலைத்து நின்று நங்கூரமாக விளையாடி 100, 150, 170 போன்ற பெரிய ஸ்கோர்களை அடிக்கடி எடுப்பதில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது.

- Advertisement -

வெளிநாடு பரவால்ல:
குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அவர் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்னின்று அவர் சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. இந்நிலையில் இப்போதெல்லாம் வெளிநாடுகளை விட இந்தியாவில் தான் பேட்டிங்க்கு அதிக சவாலான மைதானங்கள் இருப்பதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

அதில் விக்கெட்டை வெற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக விளையாடும் போது அவுட்டாகி விடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்திய மண்ணில் என்னுடைய சமீபத்திய டெஸ்ட் இன்னிங்ஸை பாருங்கள். அதாவது வெளிநாடுகளை விட கடந்த 2 – 3 வருடங்களாக இந்தியாவில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகியுள்ளது என்று நான் சொல்ல வருகிறேன். குறிப்பாக இந்தியாவில் இப்போதுள்ள பிட்ச்கள் வெளிநாடுகளை விட சவாலாக இருக்கிறது”

- Advertisement -

“அதனால் தான் நாங்கள் தனி நபர் வீரர்களின் பேட்டிங் சராசரி பற்றி பேசுவதில்லை. மாறாக சவாலான மைதானங்களில் சிறப்பாக விளையாடுவோம் என்று அனைவரும் முடிவெடுத்துள்ளோம். அதனால் எங்களுடைய கேரியரின் முடிவில் இருக்கப் போகும் பேட்டிங் சராசரியை பற்றி கவலைப்பட போவதில்லை. மேலும் ஒவ்வொரு வீரர்களிடமும் இருக்கும் வித்தியாசமான அணுகுமுறையும் நான் மாற்ற விரும்பவில்லை. அதனால் பவுலர்களுக்கு பாதகமான மைதானங்களில் அசத்துவதையே நாங்கள் விரும்புகிறோம்”

இதையும் படிங்க: கே.எல் ராகுல் பத்தி டிராவிட் சொல்வதில் எந்தவொரு கேரன்டியும் இல்ல. இது நல்லதும் கிடையாது – முகமது கைப் விமர்சனம்

“பொறுப்பை கொண்டுள்ள நீங்கள் நல்ல முடிவை கொடுத்தால் அதை விட வேறு மகிழ்ச்சியான நிலைமை இருக்காது. அது தான் சொந்த வாழ்வில் இருக்கும் கேள்விகளை விட முக்கியமானது. அந்த வகையில் தற்சமயத்தில் அடுத்த 5 – 6 மாதங்களில் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைக்காமல் இப்போது சிறப்பாக செயல்படுவதையே நான் யோசிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement