WTC Final : பெரிய மேட்ச்ல எப்படி விளையாடனுனு அவருக்கு நல்லா தெரியும். அந்த இந்திய வீரர் ரொம்ப டேஞ்சர் – கேமரூன் கிரீன் பேட்டி

Cameron Green
- Advertisement -

கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது அகமதாபாத் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது. அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் இவ்விரு அணிகளும் தற்போது இங்கிலாந்து சென்றடைந்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை வழங்கி வருகின்றனர்.

அதேபோன்று இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் வீரர்களும் தங்களது அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கப்போகும் வீரர்கள் யார்? என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அச்சுறுத்தலாக இருக்கப்போகும் வீரர் குறித்து பேசியுள்ளார்.

Gill and Kohli

இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி இதுபோன்ற மிகப்பெரிய போட்டியில் எப்போதுமே சிறப்பாக விளையாடக் கூடியவர். எனவே நிச்சயம் இம்முறையும் அவர் தனது முழு திறனை வெளிக்காட்டுவார். அவரை நாங்கள் சரியாக கையாள வேண்டும். அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் போது பதட்டமான நிலை அதிக டென்ஷனை உண்டாக்கும்.

- Advertisement -

எனவே சரியான மனநிலையுடன் களமிறங்க ஆசைப்படுகிறோம். விராட் கோலி போன்ற ஒரு வீரர் இது போன்ற மிகப்பெரிய போட்டியை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார். எனவே அவரை நாங்கள் மிகவும் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என கேமரூன் கிரீன் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இவர்தான் உண்மையான லீடர். ஒரு சீசன் முழுவதும் தோனி சி.எஸ்.கே அணிக்காக செய்த தியாகம் – சிவராமகிருஷ்ணன் பாராட்டு

அதேபோன்று சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லும் அதிகப்படியான ரன்களை குவித்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களம் காண்பதால் அவரும் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும், நிபுணர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement