இவர்தான் உண்மையான லீடர். ஒரு சீசன் முழுவதும் தோனி சி.எஸ்.கே அணிக்காக செய்த தியாகம் – சிவராமகிருஷ்ணன் பாராட்டு

Sivaramakrishnan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக முதலிடத்தில் இருந்த மும்பை அணியின் சாதனையையும் சிஎஸ்கே அணி சமன் செய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியானது இந்தியா முழுவதிலும் உள்ள சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் தோனி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

CSK

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் தான் சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனிக்கு கடைசி தொடர் என்றும் அனைவராலும் பேசப்பட்டு வந்தது. ஏனெனில் தற்போது 41 வயதை எட்டியுள்ள தோனி முழங்காலில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக இந்த தொடர் முழுவதுமே சற்று சிரமத்துடனே பங்கேற்று விளையாடி இருந்தார். அதிலும் குறிப்பாக பேட்டிங் செய்யும்போது அவர் காலில் பேண்டேட் ஒன்றை சுற்றிக்கொண்டு ரன் ஓட முடியாமல் திணறினார்.

அதே போன்று கிப்பிங்கிலும் சற்று வலியை உணர்ந்த தோனி இந்த தொடரின் ஒரு லீக் போட்டி முடிந்த பிறகு ஐஸ்கட்டிகளை வைத்துக்கொண்டு நடக்கும் புகைப்படங்களும் அதிக அளவு இணையத்தில் வைரலாகின. அதுமட்டுமின்றி தனது காயம் குறித்து பேசியிருந்த தோனியே முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதிகம் என்னை ஓட வைக்க வேண்டாம் என்றும் சென்னையின் வீரர்களிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் இந்த ஐபிஎல் தொடர் முடிந்ததும் அவர் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக மும்பை சென்று தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கான காயத்திற்கான அறுவை சிகிச்சை கொண்டுள்ளார்.

Dhoni

இந்த ஐ.பி.எல் தொடரில் இறுதிப்போட்டிக்கு பிறகு ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் மேலும் ஒரு சீசன் விளையாடுவேன் என்று கூறியுள்ள தோனி தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வினை எடுத்து வருகிறார். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முழுவதுமே தோனி வலியுடன் தான் விளையாடி இருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தோனியை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி தற்போது ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று கேள்விப்பட்டேன். தற்போது சிகிச்சையும் வெற்றிகரமாக முடிவடைந்து வீட்டிற்கு சென்று அடைந்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த சீசன் முழுவதுமே அவர் ஒரு காலில் மட்டும் தான் விளையாடியிருக்கிறார். அதுதான் ஒரு லீடருக்கான அழகு. தனது வலியை கூட பொருட்படுத்தாமல் தோனி அவரது அணியை தாங்கிப் பிடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : உங்க முடிய விட என்கிட்ட நிறைய பணம் இருக்கு, 2003 பின்னணிக்கு காத்திருந்து சோயப் அக்தரை கலாய்த்த சேவாக் – நடந்தது என்ன?

வலி இல்லாமல் நாம் எதையும் பெற முடியாது. காலில் இவ்வளவு வலி இருந்தும் அவரது சிந்திக்கும் திறன் சிறிதளவும் பாதிக்கவில்லை. இந்த வலியை தாங்கிக் கொண்டு அவரால் சிஎஸ்கே அணியை ஒரு சீசன் முழுவதும் சிறப்பாக வழிநடத்த முடிந்தது என்று நினைத்தாலே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி தோனி சி.எஸ்.கே அணிக்காக கொடுத்துள்ள அர்ப்பணிப்பு ஒரு போர் வீரனுக்குடைய மனவலிமை அவரிடம் இருப்பதாக காட்டுகிறது என சிவராமகிருஷ்ணன் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement