உங்க முடிய விட என்கிட்ட நிறைய பணம் இருக்கு, 2003 பின்னணிக்கு காத்திருந்து சோயப் அக்தரை கலாய்த்த சேவாக் – நடந்தது என்ன?

Shoaib Akhtar Virender Sehwag
- Advertisement -

ஆசிய கண்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டிகள் எப்போதுமே அனல் பறப்பது வழக்கமாகும். குறிப்பாக கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தி மோதிக் கொள்வார்கள். அதனாலேயே உலகப் புகழ் பெற்றதாக இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் சில சமயங்களில் ஏதேனும் சில வீரர்கள் வார்த்தை போரில் ஈடுபடுவது வழக்கமாகும். அதிலும் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தானின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஆகியோர் மோதிய போட்டிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

shoaib akhtar sachin tendulkar

- Advertisement -

அந்த வரிசையில் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் சோயப் அக்தர் ஆகியோர் மோதியதையும் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. பொதுவாக தொடக்க வீரராக களமிறங்கும் சேவாக் புதிய பந்தில் பந்து வீச வரும் சோயப் அக்தரை அதிரடியாக எதிர்கொண்டு பவுண்டரிகளை பறக்க விடுவார். அதற்கு நிகராக சோயப் அக்தரும் நிறைய போட்டிகளில் அவுட்டாக்கி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். அப்படி இருவருமே உச்சகட்டமாக மோதும் போது ஸ்லெட்ஜிங் செய்து கொள்வது வழக்கமாகும்.

முடியும் பணமும்:
இருப்பினும் நாளடைவில் நண்பர்களாக மாறிய அவர்கள் சமீப காலங்களில் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஜாலியாக மோதுவதையும் கலாய்ப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். முன்னதாக 2007 வாக்கில் வீரேந்திர சேவாக் தனது முடிகளை இழந்து இருந்ததை அனைவரும் அறிவோம். இருப்பினும் நாளடைவில் தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட அவரது தலையில் தற்போது நன்றாகவே நிறைய முடிகள் இருக்கின்றன.

இந்நிலையில் தமது தலைமையில் முடியில்லாத சமயத்தில் வீரேந்திர சேவாக் தலையில் இருக்கும் முடியை விட என்னிடம் அதிகமான பண நோட்டுகள் உள்ளது என்று சோயப் அக்தர் ஒருமுறை வெளிப்படையாக கலாய்த்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது தனது தலையில் சோயப் அக்தரிடம் இருக்கும் பண நோட்டுகளை விட நிறைய முடிகள் இருப்பதாக தெரிவிக்கும் சேவாக் இதை அவருடைய கண்ணில் படும் அளவுக்கு பெரிய செய்தியாக போடுங்கள் என்று தன்னிடம் பேட்டி எடுத்தவரிடம் கலகலப்பாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்கே அன்பும் சண்டையும் இருக்கிறதோ அங்கே நிச்சயமாக ஒரு நட்பும் இருக்கும். அந்த வகையில் சோயப் அக்தரும் நானும் 2003 – 04 முதலே மிகவும் ஆழமான நட்பை கொண்டுள்ளோம். மேலும் பாகிஸ்தானுக்கு நாங்கள் 2 முறை சென்று விளையாடினோம். அவர்களும் இந்தியாவுக்கு வந்து 2 முறை விளையாடினார்கள். அதனால் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கிடையே நல்ல நட்பு இருக்கிறது. அதே சமயம் நாங்கள் ஜாலியாக ஒவ்வொருவரின் காலையும் வாரிக் கொள்வோம்”

Akhtar

“அந்த வரிசையில் ஒரு முறை சோயப் அக்தர் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். அதாவது வீரேந்திர சேவாக் தலையில் இருக்கும் முடிகளை விட என்னிடம் அதிகமான பண நோட்டுகள் இருக்கிறது என்று அவர் சொன்னார். ஆனால் இப்போது என்னுடைய தலையில் நிறைய முடிகள் இருக்கிறது. குறிப்பாக தற்போது அவரிடம் இருக்கும் பண நோட்டுகளை விட என்னிடம் நிறைய முடிகள் இருக்கிறது. எனவே இந்த வார்த்தைகளை உங்களுடைய நிகழ்ச்சியின் தலைப்பாக வையுங்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க:பேசாம லோக்கல் மார்க்கெட்லயே வாங்கிக்கிறோம், இந்திய அணியின் புதிய ஜெர்ஸியின் விலையால் – ரசிகர்கள் ஏமாற்றம்

அப்படி ஒரு காலத்தில் இந்தளவுக்கு மிகவும் நட்பாக இருந்த இந்தியா பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் தற்போது இரு நாட்டுக்கும் இடையே நிலவும் எல்லை பிரச்சினை காரணமாக அடிக்கடி விளையாடுவதற்கான வாய்ப்பை கூட பெறுவதில்லை. ஆனாலும் விராட் கோலி ஃபார்மின்றி தவித்த போது இதுவும் கடந்து போகும் என்று பாபர் அசாம் ட்வீட் போட்டு ஆதரவு கொடுத்தது முதல் ஷாஹீன் அப்ரிடி காயத்தால் தவித்த போது கேஎல் ராகுல் நலம் விசாரித்தது வரை இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் நட்பாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement