பேசாம லோக்கல் மார்க்கெட்லயே வாங்கிக்கிறோம், இந்திய அணியின் புதிய ஜெர்ஸியின் விலையால் – ரசிகர்கள் ஏமாற்றம்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அணிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலித்து வருகிறது. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் 3வது இடத்தில் இருக்கும் இந்தியா டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருக்கிறது. மேலும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளில் தொடர்ந்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியை நிர்வகிக்கும் பிசிசிஐ ஐபிஎல் தொடரால் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடிகளை வருமானமாக பெற்று உலகின் பணக்கார வாரியமாக திகழ்கிறது.

அதனால் இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்வதற்கு பல நிறுவனங்கள் பல கோடி ரூபாய்களுடன் போட்டி போடுவது வழக்கமாகும். அந்த வரிசையில் இந்திய அணியினர் அணிந்து விளையாடும் ஜெர்சி ஸ்பான்சராக உலகப் புகழ் பெற்ற அடிடாஸ் நிறுவனம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது. சாதாரண ஆடைகள் முதல் காலணிகள் வரை பிரத்தியேக வேலைப்பாடுகளை செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள அந்த நிறுவனம் உலகின் டாப் பிராண்டாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

லோக்கல் போதும்:
அந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 கிரிக்கெட்டிலும் இந்திய அணியினர் விளையாடும் ஜெர்சிகளை தனித்தனியே அடிடாஸ் நிறுவனம் பிரம்மாண்ட முறையில் அறிமுகப்படுத்தியது. அதில் டெஸ்ட் போட்டிகளுக்கு வழக்கமான வெள்ளை நிறத்துடன் இந்தியாவின் பெயர் நீல நிறத்துடன் இருக்கும் வகையில் தோள்பட்டையில் அடிடாஸ் நிறுவனத்திற்கே உரிய 3 கோடுகளுடன் கூடிய டிசைனில் உருவாக்கப்பட்ட ஜெர்ஸி ரசிகர்களை கவர்ந்தது.

அதே போல ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அடர் ஊதா நிறத்திலும் டி20 கிரிக்கெட்டுக்கு வெளிர் ஊதா நிறத்திலும் பிரத்யேக டிசைனில் அடிடாஸ் நிறுவனம் வெளியிட்ட ஜெர்சிகள் அனைத்து ரசிகர்களுமே கவரும் வகையில் அமைந்துள்ளது. அந்த ஜெர்சிகளை தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர் ஆகியோரும் அணிந்து போஸ் கொடுப்பதை பார்க்கும் போது சிறப்பாகவே இருப்பதால் ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அத்துடன் அந்த ஜெர்சிகளை வரும் ஜூன் 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் முதல் பயன்பாட்டுக்கு வந்து இந்திய அணியினர் அணிந்து விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியினர் அணிந்து விளையாடும் இந்த ஜெர்சிகளை ரசிகர்கள் வாங்குவதற்கான வசதிகளை அடிடாஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாகவே தரம் மற்றும் பிராண்ட் ஆகிய இரண்டும் சேர்ந்தால் அதனுடைய விலை உச்சமாக இருக்கும் என்று சொல்வார்கள்.

அந்த வகையில் நல்ல டிசைனில் அதுவும் இந்தியா போன்ற தரமான அணி அணிந்து விளையாடும் ஜெர்ஸியின் விலை ஒர்த் என்றாலும் அது ரசிகர்களின் பட்ஜெட்டுக்கு அதிகமாக இருக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான ஜெர்ஸியும் தலா 4999 ரூபாய் என்று அடிடாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட்டின் மாதிரி ஜெர்ஸி 2999 ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

- Advertisement -

ஆனால் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் 4999 ரூபாயை வைத்து ஒரு மாதம் தங்களுடைய குடும்பத்தையே சிக்கனமாக நடத்தி விடுவார்கள். அந்தளவுக்கு இந்த புதிய ஜெர்சியின் விலை அதிகமாக இருப்பதால் பேசாமல் இன்னும் ஒரு மாதத்தில் லோக்கல் மார்க்கெட்டுக்கு வரும் போலி ஜெர்சிகளை வாங்கிக் கொள்கிறோம் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க:WTC Final : சுப்மன் கில் ஐபிஎல்’ல வேணா அசத்தலாம், ஆனா தரமான எங்ககிட்ட ஆட்டம் போட முடியாது – முன்னாள் ஆஸி வீரர் அதிரடி

அதாவது பெரிய பிராண்டான அடிடாஸ்க்கு போலியாக ஏற்கனவே அபிபாஸ், அபிதாஸ் போன்ற பல பெயர்களில் உள்ளூர் மார்க்கெட்டில் ஆடைகள் கிடைப்பது வழக்கமாகும். அந்த வகையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தியாவின் போலியான ஜெர்சியும் 300 – 500 ரூபாய்க்கு வரும் என்பதால் அதை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று ரசிகர்கள் பட்ஜெட் பத்மநாபனாக பேசத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement