இது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல. விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் குறித்து – பும்ரா நெகிழ்ச்சியான கருத்து

Bumrah-1
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய விராட் கோலி தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வந்த அவர் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைந்துள்ளார்.

- Advertisement -

இலங்கை அணிக்கெதிராக விராட் கோலி விளையாடயிருக்கும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியானது அவருக்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட்கோலி இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 7962 ரன்களை குவித்துள்ளார். இந்த நூறாவது போட்டியில் விராட் கோலி பங்கேற்பதன் மூலம் ஏகப்பட்ட சாதனைகளையும் அவர் நிகழ்த்த காத்திருக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு பல்வேறு முன்னாள் வீரர்கள் மற்றும் சக வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் தற்போதைய டெஸ்ட் துணைக்கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவும் விராட் கோலி குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Bumrah

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி தேசத்திற்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரணமான விடயம் கிடையாது. உண்மையிலேயே ஒரு வீரராக 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது என்பது ஒரு சிறப்பு வாய்ந்த சாதனை. இது அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்பும் கிடைத்த பரிசு.

- Advertisement -

இது அவருக்கு மேலும் பெருமைப்படக் கூடிய ஒரு நிகழ்வு. இந்திய அணியின் வெற்றிக்காக ஏராளமான பங்கை அளித்துள்ள அவர் இனியும் இந்திய அணிக்காக தொடர்ந்து தனது பங்கினை அளிக்க வேண்டும். அவர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் என்று நெகிழ்ச்சியுடன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் பாவம். நாம அங்க போயி விளையாடலாம் – பி.சி.சி.ஐ வெளியிட்ட புதிய அறிவிப்பு

ஏற்கனவே விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்த வேளையில் தற்போது பிசிசிஐ மொகாலியில் 50 சதவீத ரசிகர்களை போட்டியை நேரில் காண அனுமதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement