அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் பாவம். நாம அங்க போயி விளையாடலாம் – பி.சி.சி.ஐ வெளியிட்ட புதிய அறிவிப்பு

BCCI
- Advertisement -

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் புதிய டி-20 கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற வைட்வாஷ் வெற்றியை பெற்றுக்கொடுத்த அவர் கேப்டனாக முதல் தொடரிலேயே அமர்க்களப்படுத்தினார். அதன்பின் சமீபத்தில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட 2 டி20 தொடர்களையும் 3 – 0 என்ற கணக்கில் மீண்டும் கைப்பற்றிய இந்தியா ஹாட்ரிக் ஒயிட்வாஷ் வெற்றிகளை பெற்று சாதனை படைத்தது.

IND-1

- Advertisement -

இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் கடந்த 2016ம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தரம் உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள இந்திய அணி நிர்வாகம் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு முன்பாக தரமான இந்திய அணியை உருவாக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

டி20 உலககோப்பை வாங்க தீவிர முயற்சி:
ஏனெனில் கடைசியாக துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்வியடைந்து அவமானத்தைச் சந்தித்தது நாக்அவுட் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் இந்தியா பரிதாபமாக தோற்றது. மேலும் கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பின் இந்த உலக கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி தவித்து வருகிறது.

avesh khan

எனவே அந்த முயற்சியின் முதல் கட்டமாக உலகக் கோப்பைக்கு முன்பாக தரமான வீரர்களை தேர்வு செய்ய ஏதுவாக தற்போது நடந்த வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற டி20 தொடர்களில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை கேப்டன் ரோகித் சர்மா சோதனை செய்து வருகிறார். அவருக்கு மேலும் உதவி புரியும் வண்ணம் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு சில புதிய 20 ஓவர் தொடர்களில் இந்திய அணியை விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

அயர்லாந்து டி20 தொடர் அட்டவணை:
அதில் ஒரு கட்டமாக வரும் ஜூன்,ஜூலை மாத வாக்கில் அயர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக புதிய டி20 தொடரில் இந்தியா விளையாடும் உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவுக்கு எதிரான தனது சொந்த மண்ணில் விளையாடும் டி20 தொடருக்கான போட்டி அட்டவணையை அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

கோடை காலத்தில் தங்களது சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடரில் விளையாடும் அந்த அணி முதலாவதாக இந்தியாவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அதன்பின் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுவிட்டு அதன்பின் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இறுதியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அந்த அணி விளையாடவுள்ளது. இந்தியாவைப் போலவே டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காகவே இப்படி அடுத்தடுத்த 12 டி20 போட்டிகளில் அயர்லாந்து கிரிக்கெட் அணி விளையாட உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அந்த அறிவிப்பின்படி அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் அட்டவணை இதோ:
ஜூன் 26, முதல் டி20, அயர்லாந்து V இந்தியா, மலஹைட்
ஜூன் 28, 2வது டி20, அயர்லாந்து V இந்தியா, மலஹைட்.

IND vs IRE

தாராள மனசு இந்தியா:
டி20 உலக கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதையும் தாண்டி அயர்லாந்துக்கு சென்று இந்திய அணி இந்த டி20 தொடரில் விளையாடுவதற்கு வேறு ஒரு முக்கிய காரணம் உள்ளது. ஆம் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நிதி பற்றாக்குறை காரணமாக தடுமாறி வரும் நிலையில் சமீப காலங்களாக அங்கு பெரிய அளவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில்லை. அதன் காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு மேலும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே அதை சமாளிக்க இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய அணியுடன் சொந்த மண்ணில் விளையாடினால் அந்த போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி உரிமத்தில் இருந்து கிடைக்கும் பணம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு வருடத்திற்கு போதுமானதாகும். அதன் காரணமாகவே அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்த இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் யோசிக்காமல் சட்டென்று சம்மதம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணியினர் அதன்பின் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விட்டு மீண்டும் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளனர்.

இதையும் படிங்க : டி20 தொடரின் கோப்பையை வென்றதும் ரோஹித் கொண்டு போய் கொடுத்த இந்த நபர் யார் தெரியுமா? – விவரம் இதோ

அதை முடித்துக்கொண்டு வரும் ஜூன் மாதம் அயர்லாந்துக்கு பறந்து இந்த டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதன்பின் பக்கதில் உள்ள இங்கிலாந்துக்கு பறக்கும் இந்திய அணியினர் அங்கு அந்த அணிக்கு எதிராக கடந்த வருடம் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5ஆவது போட்டியில் விளையாட உள்ளது. கடைசியாக அயர்லாந்து மண்ணில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு டி20 தொடரில் இந்தியா விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement