இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 89 ஒருநாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகள் என மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.
அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், மாடலுமான சஞ்சனா கணேசன் என்பவரை கடந்த 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் மகிழ்ச்சியாக வலம் வந்த இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் அவ்வப்போது குழந்தையுடன் நேரம் செலவிடுவது, மனைவியுடன் அவ்வப்போது வெளியில் பயணிப்பது என பும்ரா பிசியாக நேரத்தை கழித்து வருகிறார்.
அதோடு சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பும்ரா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறும். அந்த வகையில் எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பும்ரா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் அதில் : “என்ன அண்ணி பார்ப்பதற்கு கொஞ்சம் உண்டாக இருக்கிறார்கள்? என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கமெண்ட்டினை வெளியிட்டுள்ள பம்ராவின் மனைவி : உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் என்ன இருக்கிறது? என்பது உனக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண்ணின் உடல் வடிவம் பற்றி இங்கு கருத்து கூறுகிறாய்.
இதையும் படிங்க : வீக்னெஸ் இல்லாத அவரிடம் ஈகோவுடன் விளையாடி அவுட்டாக்குங்க.. இங்கிலாந்துக்கு டேவிட் லாய்ட் அட்வைஸ்
இங்கிருந்து ஒழுங்காக ஓடி விடு என்று அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமெண்டை வெளியிட்டு கண்டித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட சஞ்சனா கணேசன் இறுதிச்சுற்று வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.