ரோஹித்தை விட அஸ்வினை மிகச்சரியாக கையாண்ட பும்ரா.. இரண்டாவது இன்னிங்சில் நடந்த சம்பவம் – விவரம் இதோ

Ashwin-and-Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியின் மூலம் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியிருந்தார். இப்படி நூறாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது ரோகித் சர்மாவை விட, பகுதிநேர கேப்டனாக கேப்டன்சி செய்த ஜஸ்ப்ரீத் பும்ரா இரண்டாவது இன்னிங்சின் போது ரவிச்சந்திரன் அஸ்வினை அற்புதமாக பயன்படுத்தி இருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி அது குறித்த விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் அவரை ரோகித் சர்மா சற்று தாமதமாகவே பந்துவீச செய்தது மட்டுமின்றி அவ்வப்போது அவரது பவுலிங் ஸ்பெல்லினை நிறுத்தி நிறுத்தி வழங்கி இருந்தார்.

- Advertisement -

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின்போது ரோகித் சர்மா களத்தில் இருந்து வெளியேறிய வேளையில் பகுதிநேர கேப்டனாக செயல்பட்ட பும்ரா அந்த இன்னிங்சின் இரண்டாவது ஓவரையே அஸ்வினுக்கு கொடுத்தார். அதுமட்டும் இன்றி தொடர்ச்சியாக 8 ஓவர்களை அஸ்வினை வீச செய்தார். அதன் பலனாக அஸ்வினும் ஆரம்பத்திலேயே 4 விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு சிறிய ஓய்வு கொடுத்த பும்ரா மீண்டும் அஸ்வினை கொண்டு வரும் போது அஸ்வின் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : 202 ரன்ஸ்.. ஆஸி 77/4.. நியூஸிலாந்துக்கு கைகொடுத்த சிஎஸ்கே ஜோடி.. பரபரப்பான டெஸ்டில் வெற்றி யார் பக்கம்?

இப்படி அஸ்வினை இரண்டாவது இன்னிங்சின் போது துவக்கத்திலேயே ஓவர் கொடுத்தது மட்டுமின்றி சரியான இடைவெளியில் மீண்டும் பயன்படுத்தி விக்கெட்டை வீழ்த்தியது என அற்புதமாக அஸ்வினை கையாண்டார். இதனால் ரோகித்தை விட பும்ரா சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்களும் அவரது கேப்டன்சியை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement