202 ரன்ஸ்.. ஆஸி 77/4.. நியூஸிலாந்துக்கு கைகொடுத்த சிஎஸ்கே ஜோடி.. பரபரப்பான டெஸ்டில் வெற்றி யார் பக்கம்?

NZ vs AUS
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அதனால் குறைந்தப்பட்சம் தொடரை சமன் செய்வதற்கு மார்ச் 8ஆம் தேதி துவங்கிய கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து களமிறங்கியது.

இருப்பினும் அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சுமாராக விளையாடி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 38 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கி ஆஸ்திரேலியாவை தரமாக பந்து வீசிய நியூசிலாந்து முடிந்தளவுக்கு போராடி 252 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

வெற்றி யாருக்கு:
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 90 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 7 விக்கெட்டுகள் எடுத்து போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். அதன் பின் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய நியூசிலாந்துக்கு வில் எங் 1 ரன்னில் அவுட்டானாலும் தன்னுடைய 100வது போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் அரை சதமடித்து 51 ரன்கள் எடுத்தார்.

அவருடன் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் டாம் லாதம் தனது பங்கிற்கு அரை சதமடித்து 73 ரன்கள் குவித்து நியூசிலாந்தை நிலை நிறுத்தி ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ரச்சின் ரவீந்திரா மற்றும் டார்ல் மிட்சேல் ஆகியோர் நிதானமாக விளையாடி நியூசிலாந்துக்கு முக்கிய நேரத்தில் கை கொடுத்தனர்.

- Advertisement -

குறிப்பாக 4வது விக்கட்டுக்கு முக்கியமான 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்தை வலுப்படுத்திய இந்த ஜோடியில் டார்ல் மிட்சேல் 58 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 10 பவுண்டரியுடன் அரை சதமடித்து 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஸ்காட் குக்லிஜன் 44 ரன்கள் எடுத்த உதவியுடன் நியூசிலாந்து 2வது இன்னிங்ஸில் 372 ரன்கள் குவித்து போட்டியில் கம்பேக் கொடுத்தது.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 279 ரன்களை துரத்தும் ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் 9, உஸ்மான் கவாஜாவை 6 ரன்களில் மாட் ஹென்றி அவுட்டாக்கி தெறிக்க விட்டார். அதே போல அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 6, கேமரூன் க்ரீன் 5 ரன்களில் பென் சீர்ஸ் வேகத்தில் வீழ்ந்தனர்.

இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான 3 ஆவது டி20 போட்டியில் ஹாட்ரிக் எடுத்து அசத்திய இலங்கை வீரர் – அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அதனால் நிறைவுக்கு வந்த 3வது நாள் முடிவில் 77/4 ரன்கள் எடுத்து தடுமாறும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 202 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் டிராவிஸ் ஹெட் 17*, மிட்சேல் மார்ஷ் 27* ரன்களுடன் உள்ளனர். நியூசிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. அதனால் தற்சமயத்தில் நியூசிலாந்து இப்போட்டியில் வெல்வதற்கு சற்று அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement