வங்கதேச அணிக்கெதிரான 3 ஆவது டி20 போட்டியில் ஹாட்ரிக் எடுத்து அசத்திய இலங்கை வீரர் – அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Thushara
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கு கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த சுற்றுப்பயணத்தில் :

முதலாவதாக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று நடைபெற்ற கடைசி போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகித்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 19.4 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டதால் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா 4 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் உட்பட 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக போட்டியின் நான்காவது ஓவரில் வங்கதேச அணியின் முன்னணி வீரர்கள் மூன்று பேரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையும் நிகழ்த்தினார். இதன் மூலம் இலங்கை அணி சார்பில் மலிங்கா, திஷாரா பெரேரா, அகிலா தனஞ்செயா ஆகியோருக்கு அடுத்து டி20 கிரிக்கெட் நான்காவது இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : 100வது டெஸ்டில் முத்தையா முரளிதரனின் 18 வருட சாதனையை அஸ்வின்.. சிறந்த பவுலிங் போட்டு உலக சாதனை

மேலும் இந்த போட்டியில் அவருடைய ஸ்பெஷல் யாதெனில் : போட்டியின் நான்காவது ஓவரிலேயே அவர் ஹாட்ரிக் எடுத்ததால் வங்கதேச அணியின் தோல்வி அங்கேயே உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement