100வது டெஸ்டில் முத்தையா முரளிதரனின் 18 வருட சாதனையை அஸ்வின்.. சிறந்த பவுலிங் போட்டு உலக சாதனை

Ashwin and Mualitharan
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் கடைசியில் 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி என்ற மாபெரும் சாதனையை இந்தியா படைத்தது.

மேலும் 2012க்குப்பின் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக் கொண்ட இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்துள்ளது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி அதிரடியாக விளையாடி வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலைகுனிவுடன் நாட்டுக்கு கிளம்பியது.

- Advertisement -

100இல் சிறந்த பவுலிங்:
முன்னதாக தர்மசாலாவில் நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்த சாதனை போட்டியில் முதல் இன்னிங்ஸில் 11.4 ஓவரில் 51 ரன்கள் கொடுத்த அவர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதே போல 2வது இன்னிங்ஸில் 14 ஓவரில் 77 ரன்கள் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அந்த வகையில் இந்த போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 128 ரன்கள் கொடுத்த அவர் 9 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 100வது போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் 18 வருடங்கள் சாதனையை உடைத்த அஸ்வின் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் : 9/128, இங்கிலாந்துக்கு எதிராக தரம்சாலா, 2024*
2. முத்தையா முரளிதரன் : 9/141, வங்கதேசத்துக்கு எதிராக சட்டோகிராம், 2006
3. ஷேன் வார்னே : 8/231, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், 2002

- Advertisement -

இது மட்டுமல்லாமல் கடந்த 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடிய தன்னுடைய முதல் அறிமுகப் போட்டியின் 2வது இன்னிங்ஸ் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தற்போது 100வது போட்டியின் 2வது இன்னிங்ஸில் அவர் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் 5 விக்கெட் ஹால் எடுத்த முதல் வீரர் என்று உலக சாதனையும் அஸ்வின் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா மேல புகாரே சொல்ல முடியாது.. 3 அதிர்ஷ்டம் கிடைச்சுது.. இனியாவது முன்னேறுங்க.. இங்கிலாந்துக்கு நாசர் அட்வைஸ்

மொத்தத்தில் தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிய முதல் வீரராக சாதனை படைத்த அஸ்வின் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் விளையாடத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement