“ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. ஆனாலும்” காயத்திற்கு பிறகு – ரசிகர்களுக்கு மெசேஜ் குடுத்த பும்ரா

Jasprit Bumrah
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தொடரில் விளையாட இருக்கும் அனைத்து அணிகளும் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்க தயாராகி வருகிறது.

இவ்வேளையில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி இன்னும் இரு தினங்களில் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட உள்ள வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டது.

- Advertisement -

பும்ராவின் இந்த விலகல் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் வேளையில் அவர் இல்லாமல் இந்திய அணி பந்துவீச்சில் எவ்வாறு செயல்பட போகிறது என்ற பெரிய சந்தேகமே எழுந்துள்ளது. சமீப காலமாகவே தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ரா அணிக்குள் வந்தாலும் ஒரு சில போட்டிகளிலேயே மறுபடியும் காயம் அடைந்து வெளியேறி வருவது அவரது கரியருக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காயம் காரணமாக வெளியேறியுள்ள பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் இருந்து வெளியேறிய பும்ரா காயத்திற்கு பிறகு தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாதது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து ரசிகர்களுக்கு அவர் பதிவிட்டுள்ள ஒரு கருத்தில் குறிப்பிட்டதாவது : இந்த டி20 உலக கோப்பை தொடரில் நான் இடம் பெற முடியாமல் போனது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த இக்கட்டான வேளையில் எனக்கு ஆதாரவையும், வாழ்த்துக்களையும் வழங்கி வரும் எனது நலம் விரும்புகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

இதையும் படிங்க : இப்போவாச்சும் என்னையும் என் திறமையும் புரிஞ்சுக்கோங்க – விமர்சனங்களுக்கு கேஎல் ராகுல் நெகிழ்ச்சியான பதில்

ஒருவேளை நான் விரைவில் காயத்திலிருந்து குணமடைந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் விளையாடும் இந்திய அணிக்காக இந்த தொடர் முழுவதுமே எனது ஆதரவினை தெரிவிப்பேன் என பும்ரா பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement