IND vs WI : காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரையும் தவறவிட இருக்கும் – 3 இந்திய வீரர்கள்

Shreyas Iyer IND
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது நாடு திரும்பியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஓய்வில் இருக்கும் இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

INDvsWI

- Advertisement -

அப்படி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பெரிய மாற்றம் இருக்காது என்று கூறப்படும் வேளையில் டி20 தொடரில் மட்டும் அதிகளவு மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Bumrah 1

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக குறிப்பிட்ட 3 வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏற்கனவே கடந்த ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இதுவரை அணியில் இணையாமல் இருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

அதேபோன்று ஐபிஎல் தொடருக்கு முன்னதாக காயத்தை சந்தித்து அந்த தொடர் முழுவதையும் தவறவிட்ட ஷ்ரேயாஸ் ஐயரும் இன்னும் முழுமையாக காயத்திலிருந்து மீளாததால் அவரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு ஐபிஎல் தொடரின் போது தொடைப்பகுதியில் காயமடைந்த கே.எல் ராகுல் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறார்.

இதையும் படிங்க : தோனி 3 உ.கோ ஜெயிக்க காரணமே அது தான் – இப்போ யாரு அதை ஃபாலோ பண்றா? ரோஹித் – ட்ராவிட்டை தாக்கிய அஸ்வின்

எனவே அவரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறமாட்டார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மூன்று இந்திய வீரர்களும் அணியில் இணைய மாட்டார்கள் என்றும் அவர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பின் கீழ் இருந்து நிச்சயம் வெகு விரைவில் இந்திய அணியில் இணைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement