
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது முதல் நான்கு போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கோரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்தார். முதுகு பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட காயமடைந்த பகுதியிலேயே மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்தது.
இதன் காரணமாக அவருக்கு சரியான சிகிச்சை மற்றும் ஓய்வு தேவைப்பட்டதால் சாம்பியன்ஸ் டிராபிதொடருக்கான இந்திய அணியிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது ஜஸ்ப்ரீத் பும்ரா முழு ஓய்வில் இருந்து வரும் வேளையில் மீண்டும் எப்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார்? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ஓவியிலிருந்து வந்த அவர் 2025 ஐ.பி.எல் தொடருக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது வெளியான ஒரு அறிக்கையின்படி : பும்ரா மீண்டும் வருவது தாமதமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
அந்த வகையில் தற்போது பும்ரா பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மேற்கொண்டு வரும் வேளையில் அவரது உடற்தகுதி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு குழு தகுதியை எட்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பும்ரா முழு உடற்தகுதியுடன் மீண்டும் போட்டிகளுக்கு திரும்ப இன்னும் பல நாட்கள் ஆகும் என்பதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை அவர் தவற விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட முதல் ஐந்து போட்டிகளை இழக்க வாய்ப்பு உள்ளது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா துவக்க போட்டிகளில் விளையாடாதது மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : இதை செய்ஞ்சா மட்டும் போதும்.. பும்ரா காயத்தில் இருந்து தப்பலாம் – மெக்ராத் கொடுத்த அட்வைஸ்
ஆனாலும் அந்த அணி சரியான மாற்று வீரர்களை வாங்கி வைத்துள்ளதால் நிச்சயம் அவரது இடத்தை வேறு ஒரு வீரரை வைத்து பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணி தங்களது முதல் போட்டியில் சி.எஸ்.கே அணியை எதிர்த்து மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.