இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா அண்மைக்காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது கடைசி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசாத அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பும்ரா காயத்திலிருந்து மீள என்ன செய்யவேண்டும் – மெக்ராத் அறிவுரை :
அதன் பின்னர் அந்த பரிசோதனைகளில் அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரால் விளையாட முடியாது என்று கூறப்பட்டது. அந்த வகையிலேயே அவர் நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற முடியாமல் வெளியேற்றப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திருப்புவதற்காக அவர் மெல்ல மெல்ல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிட இருக்கிறார்.
இந்நிலையில் பும்ரா இப்படி காயம் அடையாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான கிளென் மெக்ராத் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : பும்ரா மற்ற பந்துவீச்சாளர்களை விட உடலுக்கு மிகவும் அழுத்தத்தை கொடுக்கிறார். அந்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு வழிகளை முன்பே அவர் கண்டுபிடித்து இருந்தார்.
ஆனாலும் தற்போது அவரால் அதை கண்ட்ரோல் செய்ய முடியாமல் போனது. முன்பு இளமையாக இருந்த பும்ராவிற்கு தற்போது வயதாகி வருகிறது. இதன் காரணமாக அவரால் உடற்தகுதியை பேணிக் காப்பது என்பது சற்று கடினமான ஒன்றுதான். என்னை பொருத்தவரை வேகப்பந்து வீச்சாளர் என்பவர் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றிக்கு காரணமே இந்திய அணியின் அந்த ஸ்ட்ரென்த் தான் – பாண்டிங் புகழாரம்
நான் வேகத்தை குறைத்து வீசியதாலே நீண்ட நாட்கள் விளையாடினேன். வேகமாக கார் ஓட்டினால் எரிபொருள் சீக்கிரம் தீர்ந்து விடும். எனவே சரியான வேகத்தில் பந்துவீச வேண்டும். பும்ரா கூடுதல் வேகத்தை குறைத்துக் கொண்டு சராசரியான வேகத்தில் பந்துவீசினால் காயமும் ஏற்படாது, நீண்ட காலமும் விளையாடலாம் என மெக்ராத் கூறியது குறிப்பிடத்தக்கது.



