சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றிக்கு காரணமே இந்திய அணியின் அந்த ஸ்ட்ரென்த் தான் – பாண்டிங் புகழாரம்

Ponting
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரினை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணியானது வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது.

இந்திய அணியின் பலமே அவங்க தான் : ரிக்கி பாண்டிங்

பின்னர் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியையும், இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி வரலாறு நிகழ்த்தியது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு என்ன காரணம்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற தரமான ஆல் ரவுண்டர்கள் இருந்ததே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அனைவருமே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியது. அதோடு நாம் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் :

- Advertisement -

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்கள் இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்டனர். ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹார்டிக் பாண்டியா போன்ற அனுபவமும் இளமையும் வாய்ந்த ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் இந்திய அணியின் பலம் அதிகரித்தது.

இதையும் படிங்க : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட அக்சர் படேல் – ஆதரவளித்தது யார்?

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கை கொடுக்கும் அந்த மூன்று பேர் இருந்தது இந்திய அணியின் ஆழத்தை அதிகரித்ததோடு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றவும் மிக முக்கியமான காரணமாக மாறியது என ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertisement