டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட அக்சர் படேல் – ஆதரவளித்தது யார்?

Axar Patel
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தற்போது பயிற்சியினை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த தொடரின் முதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

புதிய கேப்டனை அறிவித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி :

இந்த ஐபிஎல் தொடரானது துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளில் ஏற்கனவே 9 அணிகள் தங்களது கேப்டனை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த வேளையில் டெல்லி அணி மட்டும் புதிய கேப்டன் யார்? என்பதை அறிவிக்காமல் இருந்து வந்தது.

- Advertisement -

மேலும் டெல்லி அணியால் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட கே.எல் ராகுல் தான் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கபட்டது. ஆனால் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும் தான் ஒரு சாதாரண வீரராகவே பங்களிக்க விரும்புவதாக கே.எல் ராகுல் கூறிவிட்டதால் டெல்லி அணியின் நிர்வாகம் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டெல்லி அணியால் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து தக்கவைக்கப்பட்ட அக்சர் பட்டேலை இந்த ஆண்டு அந்த அணியின் கேப்டனாக டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக டெல்லி அணிக்காக மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அக்சர் பட்டேலை அந்த அணியின் நிர்வாகம் தக்க வைத்ததோடு மட்டுமின்றி தற்போது அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கேப்டன் பதவியையும் வழங்கியுள்ளது.

- Advertisement -

டெல்லி அணியின் நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் குழுவின் நம்பிக்கையை ஆல்ரவுண்டரான அவர் அதிகம் பெற்றிருந்ததாலே அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அக்சர் பட்டேல் இதுவரை 150 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அஷ்வின் இருக்கும் போது அவரை ஏன் 10 கோடி குடுத்து வாங்குனீங்க? – கேள்வி எழுப்பிய பத்ரிநாத்

இந்நிலையில் தனக்கு கேப்டன் பதவி கிடைத்த பின்னர் பேசிய அக்சர் படேல் கூறுகையில் : எனக்கு கிடைத்துள்ள இந்த பதவியை நினைத்து உண்மையிலேயே எனக்கு பெருமையாக இருக்கிறது. என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த பதவியை வழங்கிய நிர்வாகத்திற்கும், உரிமையாளர்களுக்கும் நன்றி என அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement