அஷ்வின் இருக்கும் போது அவரை ஏன் 10 கோடி குடுத்து வாங்குனீங்க? – கேள்வி எழுப்பிய பத்ரிநாத்

Badrinath
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தயில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் சீசனானது வரும் மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. அதற்கு அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23-ஆம் தேதி விளையாட இருக்கிறது.

சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சு திட்டம் என்ன? : சுப்ரமணியம் பத்ரிநாத்

இதன் காரணமாக தற்போது சிஎஸ்கே அணியின் வீரர்கள் அனைவரும் சென்னை வந்தடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி முகாமில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முன்னாள் கேப்டன் தோனி, அனுபவ வீரர்களான ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் முதல் இளம் வீரர்கள் என அனைவருமே பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த சீசனில் சென்னை அணி நூர் முகமது விடயத்தில் என்ன முடிவை சி.எஸ்.கே அணி எடுக்கப்போகிறது? என்பது குறித்த சில கருத்துக்களை முன்னாள் சி எஸ் கே வீரரான பத்ரிநாத் முன்வைத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் எடுத்திருந்ததால் அவர் நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவுடன் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று தெரிகிறது.

ஆனால் அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமதுவை 10 கோடி ரூபாய் என்கிற பெரிய விலைக்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது. அதனை சுட்டிக்காட்டி தான் தற்போது பத்ரிநாத் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நூர் அகமது நிச்சயமாக ஒரு சிறப்பான பந்துவீச்சாளர் தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

ஆனால் ஒரு வெளிநாட்டு வீரரான அவரை 10 கோடி ரூபாய்க்கு வாங்கி அவரை எத்தனை போட்டிகளில் பயன்படுத்த முடியும்? அவரால் அவருக்கு கொடுக்கப்பட்ட அந்தத் தொகையை நியாயப்படுத்த முடியுமா? என்பது தான் என்னுடைய கேள்வி. ஏனெனில் சென்னை அணியில் ஏற்கனவே தற்போது ஜடேஜா, அஸ்வின் என இரண்டு சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 94 ரன்ஸ்.. சச்சின் க்ளாஸ்.. 196 ஸ்ட்ரைக் ரேட்டில் யுவி மாஸ்.. ஆஸியை நாக் அவுட்டாக்கிய இந்தியா ஃபைனலுக்கு தகுதி

எனவே நூர் அகமதை எப்படி அணியில் இணைப்பது? அவரை எந்த அளவிற்கு பயன்படுத்த முடியும்? அவர் வாங்கப்பட்ட பெரிய தொகைக்கு அவர் தன்னை நிரூபிப்பாரா? என்பது போன்ற கேள்விகள் என்னிடம் உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு தொடரை கைப்பற்றியது. அந்த வகையில் சென்னை அணியும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் என்று தான் நினைப்பதாக கூறியிருந்தார்.

Advertisement