
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கமஸ்டர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று படுதோல்வியுடன் நாடு திரும்பியது.
கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை பெற்று வரும் வேளையில் அடுத்ததாக இந்திய ரசிகர்களின் கவனம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மீது திரும்பியுள்ளது.
எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது தங்களது விளையாடும் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட இருக்கிறது. இம்முறை இந்த தொடரை கைப்பற்றி ஐசிசி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி காத்திருக்கிறது.
ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று இறுதியில் கோப்பையை நழுவி விட்ட இந்திய அணி இம்முறை இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கும் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் இந்திய அணி வரும் ஜனவரி 12-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் இந்திய அணியை அறிவிக்க இருக்கின்றனர்.
இதையும் படிங்க : கடைசி 5 வருஷத்துல விராட் கோலியின் நிலைமை இதுதான்.. இனி அவங்கதான் யோசிக்கனும் – ஆகாஷ் சோப்ரா
இந்த அணியில் துணை கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஹார்டிக் பாண்டியா, கே.எல் ராகுல், சுப்மன் கில் ஆகியோர் மறுக்கப்பட்டு ஆஸ்திரேலிய தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய பும்ராவிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.