இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாக ஒரு புள்ளி விவரத்தை முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி முப்பது சதங்களுடன் 9,230 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
5 வருஷமா விராட் கோலியின் நிலைமை இதுதான் :
ஆனாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரது ஆட்டம் மிக மோசமாக இருந்து வருவது நிதர்சனமான உண்மைதான். நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கூட பெர்த் போட்டியின் போது சதம் அடித்த அவர் அதன் பிறகு நடைபெற்ற அனைத்து போட்டிகளுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதிலும் குறிப்பாக ஒரே மாதிரி அவர் ஆட்டம் இழந்தது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பிய அவருக்கு இனி அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான் என்று பலரும் பேசி வருகின்றனர்.
இவ்வேளையில் ஆகாஷ் சோப்ரா விராட் கோலி குறித்து பேசுகையில் கூறியதாவது : விராட் கோலி கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தது உண்மைதான். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி ஐந்து ஆண்டுகளில் அவரால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை என்று தெரிகிறது.
ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 39 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 3 சதங்களை மட்டுமே அடித்திருக்கிறார். அதுமட்டும் இன்றி அவரின் டெஸ்ட் சராசரி 46.85 ஆக இருந்தாலும் கடைசி மூன்று ஆண்டுகளில் அவரது சராசரி வெறும் 30 ரன்கள் தான். எனவே இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட வேண்டும் எனில் நிச்சயம் தேர்வுக்குழுவினர் மனது வைத்தால் தான் முடியும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : கேரியரை காப்பாற்றி இங்கிலாந்து தொடருக்கு கோலி, ரோஹித் செலக்டாக அங்க போய் காட்டுனும்.. மஞ்ரேக்கர் அட்வைஸ்
ஏனெனில் தற்போது 36 வயதாகும் அவரது இடத்தை நிரப்ப ஏகப்பட்ட இளைஞர்கள் காத்திருப்பதால் தேர்வுக்குழுவினர் தான் இனி அவரது விடயத்தில் என்ன முடிவினை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை என ஆகாஷ் சோப்ரா பேசியது குறிப்பிடத்தக்கது.



