ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 3 – 1 என்ற கணக்கில் இழந்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையையும் 10 வருடங்கள் கழித்து நழுவ விட்டது. அந்தத் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.
ஏனெனில் அனுபவமிக்க அவர்கள் இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக விளையாடி வெற்றியில் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடைசியில் ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் வெற்றிக்கு போராடினார்கள். அவர்கள் சுமாராக விளையாடி இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்தார்கள். அதனால் அந்த இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள்.
இங்கிலாந்து தொடர்:
அதன் காரணமாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவரை கழற்றி விடுமாறு சில முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் விளையாட வேண்டுமெனில் அதற்கு முன்பாக விராட், ரோகித் சர்மா அங்கு நடைபெறும் கவுன்டி தொடரில் விளையாடி தேர்வாளர்களுக்கு தங்களுடைய ஃபார்மை காட்ட வேண்டும் என்று சஞ்சய் அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஒவ்வொரு முறையும் களத்திற்கு வரும் போது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர். ஆனால் தற்போது அவருடைய தன்னம்பிக்கை முழுவதும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தன்னுடைய ஃபிட்னஸ் காரணமாக இப்போதும் அவர் தமக்குத்தானே ஆதரவு கொடுத்துக் கொண்டு முன்னேறலாம்”
கவுன்டி தொடர்:
“அதே சமயம் அவரிடம் தற்போது டெக்னிக்கல் பிரச்சனையும் இருக்கிறது. அது போக தன்னம்பிக்கையிலும் பிரச்சனை இருக்கிறது. அதன் காரணமாக அடுத்ததாக இங்கிலாந்து தொடர் அவருக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. ஆஸ்திரேலியாவை விட அங்கே அதிகம் பந்து அவுட் சைட் ஆஃப் லைனில் ஸ்விங் ஆகி கொண்டு வரும்”
இதையும் படிங்க: பும்ராவை மாதிரி ஆஸ்திரேலிய அணியை இப்படி துவம்சம் செய்ய யாராலும் முடியாது – வாசிம் ஜாபர் பாராட்டு
“அப்படிப்பட்ட சூழ்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடும் எண்ணத்தைக் கொண்டிருந்தால் அவர்கள் கவுன்டி தொடரில் விளையாடி நாங்கள் இப்போதும் தயாராக இருக்கிறோம் என்பதை தேர்வாளர்களுக்கு காட்டுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஓய்வு என்பது தனிப்பட்ட வீரர்களின் முடிவு. அது தேர்வாளர்கள் எடுக்க வேண்டிய முடிவை சார்ந்தது” என்று கூறினார். மொத்தத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேரியர் இனிமேலும் தொடர்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



