- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நீங்க பிராக்டீஸ் பண்ண வேண்டாம்.. முதல் டெஸ்ட்க்கு முன்னதாக 3 இந்திய வீரர்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் – விவரம் இதோ

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியானது அங்கிருந்து நாடு திரும்பிய வேளையில் அடுத்த சில தினங்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்த உடனேயே அங்கிருந்து நாடு திரும்பிய இந்திய அணி தற்போது அகமதாபாத் மைதானத்தில் முகாமிட்டுள்ளது.

பயிற்சியில் 3 இந்திய வீரர்களுக்கு விடுப்பு :

ஏனெனில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள வேளையில் தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அகமதாபாத் மைதானத்திற்கு வந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மூன்று இந்திய வீரர்களுக்கு முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் அந்த மூன்று பேர் யார்? அவர்களுக்கு இந்த சிறப்பு அனுமதி கிடைக்க என்ன காரணம்? என்பது குறித்த பதிலை இங்கு காணலாம். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலுமே அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஓய்வின்றி விளையாடியிருந்தனர்.

- Advertisement -

அதேவேளையில் ஆசிய கோப்பை தொடரில் பும்ரா 2 போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டார் என்றாலும் அவருக்கு சரியான ஓய்வு என்பது தேவை. இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட மூன்று வீரர்களுக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் தேவையான ஓய்வை எடுத்துக் கொண்டு உடல்ரீதியாக அவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காகவும் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இன்னும் 114 ரன்கள் தேவை.. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – ரவீந்திர ஜடேஜா

ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்று கணக்கில் சமன் செய்து அசத்திய இந்திய அணி நிச்சயம் இந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -