இன்னும் 114 ரன்கள் தேவை.. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – ரவீந்திர ஜடேஜா

Ravindra Jadeja
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த வேளையில் தொடர்ச்சியாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பெற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் கடைசியாக நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த அவர் அடுத்ததாக தற்போது சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா நிகழ்த்த இருக்கும் சாதனை :

அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றது. இந்த டெஸ்ட் தொடரானது நாளை அக்டோபர் 2-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்கவுள்ள வேளையில் இரு அணி வீரர்களும் தற்போது இந்த முதல் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் இந்திய அணியின் அனுபவ வீரரும் தற்போதைய டெஸ்ட் துணை கேப்டனுமான ரவீந்திர ஜடேஜா இந்த டெஸ்ட் தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை படைக்கும் நோக்கில் தயாராகி வருகிறார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதம் மற்றும் 27 அரைசதம் என 3886 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் மேலும் இந்த டெஸ்ட் தொடரில் அவர் 114 ரன்களை அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை அடித்த வீரராகவும் சாதனை நிகழ்த்துவார். இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 330 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் 4000 ரன்களையும் அடித்தால் அது ஒரு மிகச் சிறப்பான சாதனையாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐசிசி மகளிர் உ.கோ: 124/6 டூ 269/8.. அச்சறுத்திய இலங்கையை போராடி வீழ்த்திய இந்தியா.. தீப்தி தனித்துவ சாதனை

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியானது அடுத்ததாக நாளை அக்டோபர் 2-ஆம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement