டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத தனித்துவமான சாதனையை படைத்த பும்ரா – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் இதுவரை படைத்திடாத ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். அதன்படி சென்சூரியன் மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா இரண்டாவது இன்னிங்சிலும் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

bumrah 1

- Advertisement -

அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் தற்போது பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 100 விக்கெட்டுகளை தற்போது கடந்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் படைத்துள்ள சாதனை யாதெனில் இதுவரை 25 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதில் வெளிநாட்டு மண்ணில் தற்போது 100 விக்கெட்டுகளை அவர் பூர்த்தி செய்துள்ளார். இதுவரை அவர் வீழ்த்தியுள்ள 105 விக்கெட்டுகளில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே அவர் இந்தியாவில் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் விரைவாக வெளிநாட்டு மண்ணில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

bumrah 2

இவருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் வீரர் முகமது அமீர் 118 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தபோது வெளிநாட்டு மண்ணில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை தற்போது கடந்துள்ள பும்ரா 105 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கும்போதே வெளிநாட்டில் 101 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது தற்போது தனித்துவமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணிக்கு தான் நல்ல சேன்ஸ். வெளியான கடைசி நாள் வானிலை அறிக்கை – நடந்தா நல்லதுதான்

அது மட்டுமின்றி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 6 ஆவது வீரராக இவர் வெளிநாட்டு மண்ணில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு முன்னதாக கபில்தேவ், ஸ்ரீநாத், ஜாஹீர் கான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement