இந்திய அணிக்கு தான் நல்ல சேன்ஸ். வெளியான கடைசி நாள் வானிலை அறிக்கை – நடந்தா நல்லதுதான்

Rain
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி பாக்சிங் டே போட்டியாக துவங்கிய இந்த முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டம் ஏற்கனவே மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்த போட்டிக்கான முடிவு இன்று தெரியவரும் அளவிற்கு போட்டி இரு அணிகளுக்குமே நெருக்கமாகவே சென்று கொண்டிருக்கிறது.

IND

இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 200 ரன்களுக்கு மேல் தேவைப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதேபோன்று கடைசி நாளில் 200 ரன்களுக்கு மேல் அடிப்பதெல்லாம் கடினமான ஓன்று.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணி ஏற்கனவே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால் இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட் மட்டுமே தேவை என்பதால் இந்திய அணியின் கையே தற்போது ஓங்கியுள்ளது. மேலும் இந்த கடைசி நாள் ஆட்டத்தில் மழை பெய்யும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்று கருதப்பட்டது.

weather

இவ்வேளையில் தற்போது கடைசி நாளின் வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி இன்றைய நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டுள்ளது. அதோடு போட்டி நிர்ணயிக்கப்பட்ட 90 ஓவர்களையும் வீசும் அளவிற்கு வானிலையும் ஒத்துழைக்கும் என்பதனால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நடராஜன் மட்டுமல்ல சதமடித்த தினேஷ் கார்த்திகையும் நீக்கிய தமிழ்நாடு அணி – என்ன காரணம்?

இப்படி கடைசி நாளின் வானிலை அறிக்கை தகவல் தெளிவாக தெரிந்தால் தற்போது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement