நடராஜன் மட்டுமல்ல சதமடித்த தினேஷ் கார்த்திகையும் நீக்கிய தமிழ்நாடு அணி – என்ன காரணம்?

Karthik
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ரஞ்சி தொடருக்கான தமிழ்நாடு அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 13-ஆம் தேதி துவங்கும் இந்த தொடருக்கான தமிழக அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தற்போது தினேஷ் கார்த்திக்கும் இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாடு அணியில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

karthik 1

- Advertisement -

ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் ஹிமாச்சல பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் சதம் அடித்து தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி தமிழ்நாட்டு அணிக்காக பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி இருந்தும் இந்த இறுதிப் போட்டியில் அனுபவத்தைப் பயன்படுத்தி சதமடித்து இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இவரை நீக்கியதற்கான காரணத்தை தமிழ்நாடு கிரிக்கெட் நிர்வாகம் வெளியிடவில்லை. இருப்பினும் அவரது இந்த வீக்கத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று ரஞ்சி தொடரானது டெஸ்ட் போட்டிகளை போன்று நடைபெறும் என்கிற காரணத்தினால் இதிலிருந்து ஓய்வு தேவைப்படலாம் என்று தினேஷ் கார்த்திக் இந்த முடிவு எடுத்திருக்கலாம். அல்லது 36 வயதான தினேஷ் கார்த்திக் இதுபோன்ற ரெட் பால் கிரிக்கெட்டில் தேவையில்லை என்று தமிழக கிரிக்கெட் நிர்வாகம் நினைத்திருக்கலாம்.

tn

இந்த இரண்டு காரணங்களால் அவர் தமிழக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் தினேஷ் கார்த்திக் தமிழக அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் நிர்வாகம் எந்த ஒரு விளக்கத்தையும் வெளியிடவில்லை. அதே போன்று அவரும் தனது இடம் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 4 ஆம் நாளான நேற்றே வெற்றியை உறுதி செய்த இந்திய அணி. பிளான் இதுதான் – விவரம் இதோ

இதன் காரணமாக தமிழக அணி தேர்வு எவ்வாறு நடைபெற்றது என்பதும் புரியாமல் உள்ளது. தினேஷ் கார்த்திக் பெயரானது இடம்பெறவில்லை என்றாலும் தற்போது தமிழக அணி பலமாகவே உள்ளது என்றே கூறலாம். இந்த ரஞ்சி தொடருக்கான தமிழக அணியின் கேப்டனாக விஜய் ஷங்கரும், துணை கேப்டனாக வாஷிங்டன் சுந்தரும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement