4 ஆம் நாளான நேற்றே வெற்றியை உறுதி செய்த இந்திய அணி. பிளான் இதுதான் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 26-ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் பாக்சிங் டே போட்டியாக தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 327 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

INDvsRSA

இதன் காரணமாக இந்திய அணி 130 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தது. இந்த இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 174 ரன்களை குவிக்க தென் ஆப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் இந்த போட்டியில் முடிவு கிடைக்காதோ என்று நினைக்கத் தோன்றியது.

- Advertisement -

ஆனால் தற்போது இந்த போட்டியின் முடிவு இந்திய அணிக்கு முற்றிலும் சாதகமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த முதல் போட்டியின் வெற்றி நமக்கு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஏனெனில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தென் ஆப்பிரிக்க அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.

shami 2

மேலும் தற்போது களத்தில் இருக்கும் கேப்டன் டீன் எல்கர் மற்றும் பவுமா ஆகியோரது விக்கெட்டை இந்திய அணி விரைவில் வீழ்த்தும் பட்சத்தில் போட்டி 2 மணி நேரம் கூட தாக்கு பிடிக்காது. அந்த அளவிற்கு தற்போது இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி வருகிகின்றனர். 5 ஆம் நாளான இன்று முதல் ஒருமணி நேரத்திற்குள் 2 விக்கெட் எடுப்பதே இந்திய அணியின் திட்டமாக உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 17 ஆண்டுகால கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்து ஓய்வை அறிவித்த நியூசி வீரர் – ரசிகர்கள் வருத்தம்

எனவே நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது பும்ரா, ஷமி, சிராஜ் என அனைவரும் வேகப்பந்துவீச்சு தாக்குதலை நடத்தி வருவதால் அவர்களே ஐந்தாவது நாள் காலை மாற்றி மாற்றி பந்து வீசுவார்கள். இதனால் விரைவில் இந்திய அணி வெற்றி பெறும் என்று நம்பலாம்.

Advertisement