17 ஆண்டுகால கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்து ஓய்வை அறிவித்த நியூசி வீரர் – ரசிகர்கள் வருத்தம்

Taylor-2
- Advertisement -

நியூசிலாந்து அணியை சேர்ந்த அனுபவ வீரரான ராஸ் டெய்லர் அந்நாட்டு கிரிக்கெட்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இதுவரை 110 டெஸ்ட், 233 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 40 சதங்களுடன் 18074 ரன்களை குவித்துள்ளார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரராக சாதனை படைத்த ராஸ் டைலர் பணிக்காக கடந்த பல ஆண்டுகளாக முக்கிய வீரராக இடம்பெற்று விளையாடி வந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு தான் ஓய்வு பெறுவதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் இரண்டு போட்டிகளிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான தொடருக்கு பிறகு அதாவது 6 ஒருநாள் போட்டிகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வை அறிவிக்க உள்ளார்.

- Advertisement -

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்த ராஸ் டைலர் : இன்று என்னுடைய ஓய்வு முடிவை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. எல்லா நல்ல விடயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு அந்தவகையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும், அதன்பிறகு ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லேண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான 6 போட்டிகளிலும் பங்கேற்பதோடு ஓய்வை பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் எனது 17 வருட கிரிக்கெட் பயணத்தில் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. எப்பொழுதும் நியூசிலாந்து அணிக்காக ஆடியயதில் மிகவும் பெருமை என்று பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்தாலும் அந்நாட்டு கிரிக்கெட்க்காக பல்வேறு சாதனைகளைப் புரிந்த அவரை மகிழ்ச்சியுடன் பிரியா விடை கொடுக்க காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியிலிருந்து மட்டுமல்ல தமிழக அணியில் இருந்தும் நீக்கப்பட்ட நட்டு – காரணம் என்ன தெரியுமா?

நியூசிலாந்து அணி சார்பாக அதிக டெஸ்ட போட்டிகளில் விளையாடியுள்ள டேனியல் வெட்டோரியின் சாதனை சமன்செய்து டைலர் வெளியேற உள்ளார். ராஸ் டெய்லர் இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளதால் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டேனியல் வெட்டோரி(112 டெஸ்ட்) உடன் சாதனையை பகிர்ந்து கொண்டு விடை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement