இந்திய அணியிலிருந்து மட்டுமல்ல தமிழக அணியில் இருந்தும் நீக்கப்பட்ட நட்டு – காரணம் என்ன தெரியுமா?

Nattu
- Advertisement -

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் மத்தியில் யார்க்கர் கிங் என்று அழைக்கப்பட்டார். தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக இடம்பிடித்த நடராஜன் அங்கு மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். அதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே மேலும் தொடர்ந்து அவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

nattu

- Advertisement -

ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இதுவரை அணியில் இணையாமல் உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளையும் அவர் தவறிவிட்டார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணியில் இருந்தும் அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சையது முஷ்டாக் அலி தொடரில் இடம் பெற்றிருந்த நடராஜன் அரையிறுதி போட்டிகளுக்கு பின்னர் பிளேயிங் லெவனில் விளையாட மறுக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஜனவரி 13-ஆம் தேதி துவங்கவுள்ள ரஞ்சி தொடருக்கான தமிழக அணியில்இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

nattu

இந்நிலையில் நடராஜன் இந்த ரஞ்சி கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறாததற்கு அவர் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று ஒரு காரணம் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடராஜன் அதிலிருந்து இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை என்றும் அவர் உடல் தகுதி பெற்றால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஞ்சி கோப்பைக்கான தமிழக அணி இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு ரன் வித்தியாசத்தில் தோனியின் சாதனையை முறியடிக்க தவறிய ரிஷப் பண்ட் – ஜஸ்ட் மிஸ்

1, விஜய் சங்கர், 2,வாசிங்டன் சுந்தர் 3,பாபா இந்தரஜித், 4, பாபா அப்ரஜித், 5,ஜெகதீசன், 6,ஷாரூக்கான், 7,சாய் சுதர்சன், 8, ரஞ்சன் பால், 9,சூரியபிரகாஷ் 10,கௌசிக் காந்தி 11,கங்கா ஸ்ரீதர் ராஜூ, 12,சந்தீப் வாரியர், 13,எம். முகமது. 14,சிலம்பரசன். 15,சரவணகுமார், 16,அஸ்வின் கிறிஸ்ட்,17விக்னேஷ், 18,சாய் கிஷோர். 19,எம்.சித்தார்த் 20, கவின்

Advertisement