நாளைய 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இந்த மாற்றம் இருக்கும் – துணைக்கேப்டன் பும்ரா பேட்டி

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மொகாலியில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsSL cup

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மார்ச் 12-ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் துவங்குகிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன.

ஏற்கனவே முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இந்த போட்டியிலும் இலங்கை அணியை வீழ்த்தி டி20 தொடரில் அடைந்த ஒயிட்வாஷ் வெற்றியை போன்று இந்த டெஸ்டிலும் வெற்றி பெற ஆவலுடன் காத்திருக்கிறது. அதே வேளையில் ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் இந்த இரண்டாவது போட்டியில் ஆறுதல் வெற்றியை அடைய இலங்கை அணியும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

axar 2

நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ உள்ளதாக இந்திய அணியின் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத அக்சர் பட்டேல் நிச்சயம் நாளை 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த டெஸ்டில் அக்சர் பட்டேலும் இந்திய அணியுடன் இணையும்போது இந்திய அணியின் பலம் இன்னமும் அதிகரிக்கும்.

- Advertisement -

பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்று வகையிலுமே அக்சர் பட்டேல் அசத்தலாக செயல்படக்கூடியவர். சமீப காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு வந்த இவர் தற்போது காயத்திலிருந்து மீண்டு உள்ளதால் நேரடியாக இந்திய அணியில் இணைவார் என்று ஜஸ்பிரித் பும்ரா உறுதி செய்துள்ளார். காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரை தவறவிட்ட அக்சர் பட்டேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்று இருந்தார்.

இதையும் படிங்க : இலங்கை 2வது டெஸ்ட் : விராட் கோலி, ரோஹித் சர்மா, அஷ்வின் படைக்க காத்திருக்கும் மைல்கல் சாதனைகள் இதோ

ஆனாலும் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் தான் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுகிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான அக்சர் பட்டேல் இதுவரை இந்திய அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement