இலங்கை 2வது டெஸ்ட் : விராட் கோலி, ரோஹித் சர்மா, அஷ்வின் படைக்க காத்திருக்கும் மைல்கல் சாதனைகள் இதோ

IND
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி மார்ச் 12-ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்க உள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

jadeja

- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 2வது போட்டியிலும் வெற்றி பெற்று 2 – 0 என்ற கணக்கில் மீண்டுமொரு ஒயிட்வாஷ் வெற்றியை இந்தியா பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே காணப்படுகிறது. மேலும் பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் பகலிரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடப்பட உள்ளது மிகவும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இலங்கையை புரட்டும் இந்தியா:
இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா என பல உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்து காணப்படுவதால் டி20 தொடரை போல டெஸ்ட் தொடரிலும் வைட்வாஷ் வெற்றியை கண்டிப்பாக பெறும் என நம்பப்படுகிறது.

Jadeja-1

மறுபுறம் ஒரு சில உலகத்தரம் வாய்ந்த வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு கத்துக்குட்டி அணியாக காணப்படும் இலங்கை டி20 தொடரில் மோசமாக விளையாடிதை போலவே டெஸ்ட் தொடரிலும் அதைவிட மோசமாக விளையாடி வருகிறது. இருப்பினும் பெங்களூருவில் நடைபெறும் இந்தப் போட்டியில் எப்படியாவது முழுமூச்சுடன் போராடி ஆறுதல் வெற்றியுடன் இந்த சுற்றுப்பயணத்தை முடிக்க இலங்கை அணி முயற்சி செய்யுமா என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

சாதித்த விராட் கோலி, அஷ்வின்:
முன்னதாக மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த நட்சத்திரம் விராட் கோலிக்கு சிறப்பு தொப்பியை பரிசளித்து பிசிசிஐ கௌரவப்படுத்தியது. அந்தப் போட்டியில் 45 ரன்கள் எடுத்த அவர் டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Kohli-1

அதேபோல் அந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகளை சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய பந்துவீச்சாளர் (436 விக்கெட்கள்) என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை (434 விக்கெட்கள்) உடைத்து புதிய சாதனை படைத்தார். இதுமட்டுமல்லாமல் அந்தப் போட்டியில் ஆல்-ரவுண்டராக அசத்தி ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா, முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா ஆகியோரும் புதிய சாதனைகளை படைத்தனர்.

- Advertisement -

காத்திருக்கும் புதிய சாதனைகள்:
அந்த வகையில் பெங்களூருவில் நடைபெறும் இந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஒரு சில நட்சத்திர இந்திய வீரர்கள் மேலும் சில சாதனைகளை படைக்க போகிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

kohli 1

1. தற்போது 100 போட்டிகளில் 8007 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 32-வது இடத்தில் இருக்கும் விராட் கோலி இன்னும் 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் ஆகியோரை முந்தி புதிய மைல்கல்லை எட்டுவார். வெஸ்ட் இண்டீஸ் கண்ட மகத்தான ஆல்-ரவுண்டரான சர் கேரி சோபர்ஸ் 93 போட்டிகளில் 8032 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் 128 போட்டிகளில் 8029 ரன்களை எடுத்துள்ளார்.

- Advertisement -

2. இத்துடன் பெங்களூர் போட்டியில் களமிறங்கும் அவர் 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை தென்ஆப்பிரிக்காவின் கேரி க்ரிஸ்டன், மகாயா நிடினி மற்றும் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வார்.

Ashwin

3. பெங்களூரு போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் விளையாடிய 9-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அறிமுகமான அவர் இதுவரை ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 399 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

3. தற்போது 85 போட்டிகளில் 436 விக்கெட்டுகளை எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் பெங்களூரு டெஸ்டில் இன்னும் 4 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 8-வது பந்துவீச்சாளர் என்ற தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் சாதனையை உடைத்து புதிய சாதனை படைப்பார். தற்போது டேல் ஸ்டைன் 93 போட்டிகளில் 439 விக்கெட்களை எடுத்து 8-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்த விஷயத்துக்கு நான் என்ன பதில் சொல்வதுன்னு தெரியல – ரோஹித் சர்மா குறித்து மனம்திறந்த அஷ்வின்

4. மேலும் பெங்களூரு டெஸ்டில் அவர் ஏதேனும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்களை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக 5 விக்கெட் ஹால் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்வார். இதுவரை அனில் கும்ப்ளே இந்திய மண்ணில் 63 டெஸ்ட் போட்டிகளில் 25 முறை 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 போட்டிகளில் 24 முறை 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement