கணுக்கால் மடங்கிய நிலையில் பலத்த காயமடைந்து வலியுடன் வெளியேறிய பும்ரா – விளையாட முடியுமா?

bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களுடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடியது. மூன்றாம் நாளான இன்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே கிடைத்தது.

அதன்படி இன்றைய நாள் ஆட்டம் ஆரம்பித்தபோது அசத்தலாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஆட்டம் ஆரம்பித்த அடுத்த ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பாக லுங்கி நெகிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்கா அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பத்தாவது வரை வீசும் போது வலது கணுக்காலில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக வலியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு ஏற்பட்ட இந்த காயமானது மிக தீவிரமாக இருக்கும் என்பது பார்ப்பதற்கே அப்பட்டமாக தெரிந்தது. அந்த அளவிற்கு கணுக்கால் வளைந்தபடி தரையில் சென்றது. இதன் காரணமாக உடனடியாக ஓய்வறைக்கு திரும்பிய பும்ரா மருத்துவர்கள் உதவியுடன் காலில் கட்டுப்போட்ட படி வெளியில் அமர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவமானப்படுத்திய மைக்கல் வாகனை நியாபகம் வைத்து பழிதீர்த்த – வாசிம் ஜாபர்

தற்போது ஓய்வறையில் அமர்ந்திருக்கும் பும்ராவிற்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் பீல்டிங் செய்து வருகிறார். மீண்டும் முதல் இன்னிங்சில் அவர் பந்துவீச வாய்ப்பு உள்ளதா? அல்லது இல்லையா? என்பது மருத்துவ குழுவின் அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement