2 ஆண்டுகளுக்கு முன்னர் அவமானப்படுத்திய மைக்கல் வாகனை நியாபகம் வைத்து பழிதீர்த்த – வாசிம் ஜாபர்

- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த வேளையில் இரு போட்டிகளிலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே போட்டியாக 3வது டெஸ்ட் போட்டி துவங்கியது.

இந்த போட்டியில் மூன்றாம் நாளான இன்று ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சின் போது 68 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி பெரும் அவமானத்தைச் சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பெற்ற தோல்வியின் மூலம் அந்த அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை ட்விட்டர் வாயிலாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் படுபயங்கரமாக கலாய்த்துள்ளார். அதற்கு காரணம் யாதெனில் : கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஹாமில்டன் நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 92 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அப்போது அந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்த மைக்கல் வாகன் 100 ரன்களுக்குள் இந்தியா ஆல்-அவுட் ஆகிறது என்னால் நம்ப முடியவில்லை. இப்போதைய கிரிக்கெட்டில் 100 ரன்களுக்குள் ஒரு அணி ஆட்டம் இழப்பதா? என்று கிண்டல் செய்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவால் வந்துள்ள பிரச்னை. ஒருநாள் அணியை தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் – காரணம் என்ன?

இந்நிலையில் அதனை சரியாக ஞாபகம் வைத்திருந்த வாசிம் ஜாபர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மெல்போர்ன் மைதானத்தில் இன்று 2-வது இன்னிங்சில் 68 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனதும் அதனை குறிப்பிட்டு இங்கிலாந்து 68-க்கு ஆல் அவுட் என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement