- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உ.கோ கருத்தில் கொண்டு நியூசிலாந்து தொடரில் 2 வீரர்களுக்கு ஓய்வு – நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் 2 வீரர்களுக்கு ஓய்வு :

அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி துவங்கவுள்ள வேளையில் அதற்குள் அணி அறிவிக்கப்பட வேண்டும்.

- Advertisement -

அப்படி சரியான நேரத்தில் அணி அறிவிக்கப்பட்டால் தான் இந்திய ஒருநாள் அணி அவர்களது பயிற்சியை மேற்கொள்ளப் போதிய நேரம் கிடைக்கும் என்பதனால் விரைவில் இந்திய அணியின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வெளியாக இருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இரண்டு சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆகிய இருவருக்கும் ஓய்வு வழங்கப்படவுள்ளது.

- Advertisement -

ஏனெனில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரானது பிப்ரவரி மாதம் துவங்க இருக்கும் வேளையில் அதற்கு முன்னதாக 5 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து தொடரில் விளையாடும் வகையிலும் டி20 உலக கோப்பை தொடர் முழுவதும் அவர்கள் விளையாட வேண்டும் என்பதற்காகவே பும்ரா மற்றும் பாண்டியாவிற்கு ஓய்வு வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு பதில் அக்சர் படேல் டி20 அணிக்கான துணை கேப்டனாக அறிவிக்கப்பட இதுவே காரணம் – அஜித் அகார்கர்

இதனால் நியூசிலாந்து தொடரில் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் இருவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்ஷித் ராணா ஆகிய இருவரில் ஒருவர் வேகப்பந்து வீச்சாளராகவும், நிதீஷ் ரெட்டி அல்லது ஷிவம் துபே ஆகிய இருவரில் ஒருவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராகவும் அணியில் மாற்று வீரராக இடம்பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

- Advertisement -