சுப்மன் கில்லுக்கு பதில் அக்சர் படேல் டி20 அணிக்கான துணை கேப்டனாக அறிவிக்கப்பட இதுவே காரணம் – அஜித் அகார்கர்

Ajit Agarkar
- Advertisement -

இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளுக்கான துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அதோடு ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் டி20 அணிக்கு திரும்பிய அவர் துவக்க வீரருக்கான இடத்தையும் பிடித்தார். இதன் காரணமாக துவக்க வீரராக சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழக்க நேரிட்டது மட்டுமின்றி பிளேயிங் லெவனிலும் தனது இடத்தை இழக்கும் சூழலை சந்தித்திருந்தார்.

அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? : அஜித் அகார்கர்

அதனை தொடர்ந்து டி20 போட்டிகளில் துணை கேப்டனாக அவர் விளையாடி வந்தாலும் இந்த ஆண்டு முழுவதுமே ஒரு அரைசதம் கூட அடிக்காமல் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வந்தார். அதனால் அதிருப்தி அடைந்த அணியின் நிர்வாகம் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது அணியின் காம்பினேஷனை கணக்கில் காண்பித்து அவரை நீக்கியது.

- Advertisement -

மேலும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனே துவக்க வீரராக தொடர்வார் என்றும் அறிவித்தது. அதுமட்டுமின்று ரிங்கு சிங், இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கும் மீண்டும் டி20 அணியில் இடம் வழங்கியது. இப்படி டி20 போட்டிகளில் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட சுப்மன் கில்லை துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன்? என்றும் அக்சர் பட்டேலை மீண்டும் துணை கேப்டனாக அறிவித்தது ஏன்? என்பது குறித்தும் தெளிவான விளக்கத்தை தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டுதான். ஆனால் தற்போது அவர் அணியில் இல்லை. சற்று மோசமான பேட்டிங் பார்ம் காரணமாகவும், அணியின் காம்பினேஷன் காரணமாகவும் தான் அவர் அதிரடியாக டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அப்படி அவர் நீக்கப்பட்ட பிறகு யாராவது ஒருவரை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் நாங்கள் அக்சர் பட்டேலை துணை கேப்டனாக தேர்வு செய்தோம். ஏனெனில் சுப்மன் கில் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த இடைவெளிகளில் அக்சர் படேல் தான் இந்திய டி20 அணிக்கு துணை கேப்டனாக இருந்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவரே துணை கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

இதையும் படிங்க : சறுக்கலை சந்திக்கப்போகும் விராட் கோலி, ரோஹித் சர்மா.. முன்னேற்றம் காணப்போகும் சுப்மன் கில் – பி.சி.சி.ஐ முடிவு

இதன் காரணமாக ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த அவரை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று நினைத்து அவருக்கு முன்னுரிமை வழங்கினோம். டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தான் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடும் என்றும் அஜித் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement