IND vs WI : சீக்கிரமா அதை செய்ங்க, 500வது போட்டியில் சதமடித்த விராட் கோலியிடம் – ஜாம்பவான் பிரைன் லாரா முக்கிய கோரிக்கை

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியா ஜூலை 22ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 438 ரன்கள் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 29வது சதமடித்து 121 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிமர் ரோச், ஜோமேல் வேரிக்கன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Kohli-1

- Advertisement -

அதை தொடர்ந்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் 3வது நாள் முடிவில் 229/5 ரன்களுடன் விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் களமிறங்கிய 4வது இந்தியர் மற்றும் உலக அளவில் 10வது வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி உலகிலேயே 500வது போட்டியில் அரை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தார்.

பிரையன் லாரா கோரிக்கை:
அத்துடன் 500 சர்வதேச போட்டிகளின் முடிவில் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்டுள்ள ஒரே வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் உடைத்தார். இந்த நவீன கிரிக்கெட்டில் போன்ற பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டும் அசத்தும் நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியில் ஆல் ஏரியாவிலும் கில்லியாக செயல்பட்டு வருவதே விராட் கோலியின் ஸ்பெஷலாக இருக்கிறது.

Kohli

இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் 57.32, டி20 கிரிக்கெட்டில் 52.74 என 50க்கும் மேல் இருக்கும் அவருடைய பேட்டிங் சராசரி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கேரியரில் முதல் முறையாக 50க்கும் கீழே சென்றது. ஆனால் 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து இத்தொடரில் அசத்தி வருவதால் தற்போது அவருடைய பேட்டிங் சராசரி 49.30 என மீண்டும் உயரத் வாங்கியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மிகச் சிறந்த வீரரான விராட் கோலி தம்முடைய கேரியரின் முடிவில் பேட்டிங் சராசரியை 50க்கும் மேல் உயர்த்த வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா கேட்டுக் கொண்டுள்ளார். தன்னுடைய சொந்த ஊரான ட்ரினிடாட் நகரில் 500வது போட்டியில் விளையாடி சாதனை படைத்த அவரை ஆரம்பத்திலேயே நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ப்ரையன் லாரா தற்போது இது பற்றி பேசியது பின்வருமாறு.

Lara

“அவர் மிகச் சிறந்த வீரர். அவரைப் போன்ற ஒருவரை நீங்கள் நீண்ட காலம் கீழே வைத்திருக்க முடியாது. ஒருவேளை நீங்கள் அதை செய்தால் இறுதியில் அதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும். மேலும் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. அவரைப் போன்ற அற்புதமான வீரர் நீண்ட காலம் கீழேயே இருப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அத்துடன் அவரைப் போன்ற வீரர் மீண்டும் 50 சராசரியை தொடுவார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க:IND vs WI : இன்னும் டி20 மூட்லயே இருக்கீங்களா? சுமாராக அவுட்டான இளம் இந்திய வீரர் மீது – ஜஹீர் கான் அதிருப்தி

“குறிப்பாக தன்னுடைய கேரியரை 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியில் முடிப்பதற்கு அவர் விரும்புவார். எனவே அதற்காக தேவைப்படும் நிறைய ரன்களை அவர் அடிப்பார் என்று நினைக்கிறேன். நல்ல கட்டுக்கோப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அவர் விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உலகம் முழுவதிலும் இருப்பவர்கள் விராட் கோலி பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement