- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வங்கதேசத்தை புரட்டி எடுத்து இந்தியா 100/0ன்னு துவங்குவாங்க.. காரணம் இது தான்.. லாரா அதிரடி கணிப்பு

ஐசிசி 2024 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய இரண்டாவது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொளிக்கிறது. அப்போட்டி ஜூன் 22ஆம் தேதி ஆன்ட்டிகுவா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இந்தத் தொடரில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத இந்தியா சூப்பர் 8 சுற்றிலும் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

மேலும் இந்திய அணியில் விராட் கோலி, சூரியகுமார், ரிஷப் பண்ட், பும்ரா தரமான வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் இந்தியா இந்தப் போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தி வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் வழக்கம் போல இந்தத் தொடரிலும் வங்கதேசம் ஆரம்ப முதலே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

லாராவின் கணிப்பு:
அத்துடன் வங்கதேச அணியில் சாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ரஹ்மான் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர்த்து மேட்ச் வின்னர்கள் அதிகமாக இல்லை. இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச பவுலர்களை புரட்டி எடுத்து இந்தியா 100/0 என்ற அதிரடியான துவக்கத்தை பெறும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா கணித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்தியா ஒருவேளை முதலில் பேட்டிங் செய்தால் விக்கெட்டுகள் இழப்பின்றி 100 ரன்கள் எடுப்பார்கள் அல்லவா? ஒருவேளை அவர்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தாலும் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுப்பார்கள். முஸ்தபிசூர் ரகுமான் அற்புதமான பவுலர். அவர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பார். இந்திய அணி தற்சமயத்தில் தங்கள் பாதையில் வரும் ஒவ்வொரு எதிரணிகள் மீதும் ஓடி வருகிறது”

- Advertisement -

“எனவே இது நடைபெறும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா தங்களுடைய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் கொஞ்சம் கவலையுடன் இருக்கிறார்கள். அந்த பிரச்சனையை வங்கதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் அவர்கள் தீர்ப்பார்கள். இந்திய அணிக்கு வங்கதேசம் அச்சுறுத்தலை கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனவே இந்தியா நல்ல ஓபனிங் பார்ட்னர்ஷிப்பை எதிர்பார்க்கும். அனைத்தும் அவர்கள் இடத்தில் விழுகிறது”

இதையும் படிங்க: விராட் கோலியை விட்டா ஒன்னும் தெரியாதா? அவர் அசத்துவதையும் பாருங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் சாடல்

“இந்த உலகக் கோப்பையில் சவாலான பிட்ச்கள் காரணமாக மற்ற அணிகள் ஆதிக்கத்துடன் விளையாடவில்லை. ஒருவேளை இந்தியா தங்களுடைய ஓப்பனிங் பிரச்சனையை சரி செய்தால் நன்றாக இருக்கும். சொல்லப்போனால் அது பிரச்சனையில்லை. ஏனெனில் அங்கே அவர்களிடம் 2 மகத்தான வீரர்கள் விளையாடுகின்றனர். எனவே ஃபைனல் மற்றும் செமி ஃபைனலுக்கு முந்தைய நேரத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய மகத்தான வீரர்கள் இப்போட்டியில் முன்னோக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -