விராட் கோலியை விட்டா ஒன்னும் தெரியாதா? அவர் அசத்துவதையும் பாருங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் சாடல்

Sanjay Manjrekar 8
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றை கடந்து சூப்பர் 8 சுற்றில் விளையாடி வருகிறது. குறிப்பாக சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அப்போட்டி ஜூன் 22ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஆன்டிகுவா நகரில் நடைபெறுகிறது.

முன்னதாக இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. ஏனெனில் 80 சதங்கள் அடித்து 26,000+ ரன்கள் குவித்து ஏராளமான அனுபவத்தை கொண்டுள்ள அவர் நன்றாக விளையாடும் போது இந்தியாவின் வெற்றி எளிதாக மாறிவிடும்.

- Advertisement -

இந்தியாவை பாருங்க:
ஆனால் இம்முறை 1, 4, 0, 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் இதுவரை வெற்றியில் கை கொடுக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதன் காரணமாக துவக்க வீரருக்கு பதிலாக அவர் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகளும் காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய ரசிகர்களும் வல்லுனர்களும் விராட் கோலியின் ஃபார்ம் பற்றி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என சஞ்சய் மஞ்ரேக்கர் சாடியுள்ளார்.

எனவே அனைவரும் இந்திய அணியை பற்றி யோசிக்குமாறு தெரிவிக்கும் அவர் ஜஸ்ப்ரித் பும்ரா அசத்துவதை பார்க்குமாறும் கூறியுள்ளார். இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா என்பதை பற்றி யோசிக்காமல் நாம் இந்திய கிரிக்கெட்டை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஐபிஎல் தொடரில் சுனில் நரேன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அசத்துவதை போல் ஜஸ்ப்ரித் பும்ரா அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 விதமான சூழ்நிலைகளிலும் செயல்பட்டு வருகிறார். அதாவது அமெரிக்காவை விட அவர் இங்கே இன்னும் சிறப்பாக செயல்படுகிறார். உலகின் இதர தலைசிறந்த பவுலர்களுக்கும் பும்ராவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்”

இதையும் படிங்க: அதை நினச்சு பயப்படுறாங்க.. 10 வருடங்களாக ஐசிசி தொடரில் இந்தியாவின் தோல்வி பற்றி இயன் ஸ்மித்

“இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் பும்ராவை வைத்திருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி சுமாராக செயல்பட்டதை தாண்டி தொடர்ச்சியாக வெற்றி பெறும் அளவுக்கு இதர இந்திய வீரர்கள் அசத்தி வருகிறார்கள். அதனால் முக்கிய நேரத்தில் விராட் கோலி ஃபார்முக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து இந்திய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement