- Advertisement -
இந்திய கிரிக்கெட்

யுவ்ராஜ் சிஷ்யன்.. அபிஷேக் பணத்துக்கு இல்லாம அதுக்கும் முக்கியதுவம் கொடுக்கும் பிளேயர்.. லாரா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். அங்கே ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்து எதிரணிகளைப் பந்தாடிய அவர் அனைவருடைய கவனத்தை ஈர்த்தார்.

அதனால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அபிஷேக் டி20 கிரிக்கெட்டில் எதிரணிகளை சொல்லி அடித்து நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரணிகளை பந்தாடிய அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதன் முடிவில் தம்முடைய குருவான யுவ்ராஜ் சிங்கை சந்தித்த அவர் ஆசியும் வாழ்த்துக்களையும் பெற்றார்.

- Advertisement -

திறமையான அபிஷேக்:

இந்நிலையில் அபிஷேக் ஷர்மா மிகவும் திறமையுடைய வீரர் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா பாராட்டியுள்ளார். யுவ்ராஜ் சிங் போலவே தேவைப்படும் போது அவர் தம்மிடமும் ஆலோசனைகளைக் கேட்பார் என்று லாரா தெரிவித்துள்ளார். அத்துடன் பணத்துக்காக டி20 கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய வீரர்களைக் கொண்ட தற்போதைய சூழ்நிலையில் அபிஷேக் சர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாட முயற்சித்து வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. “ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக அபிஷேக் ஷர்மாவை எனக்குத் தெரியும். லாக்டவுன் சமயத்தில் அந்த அணியில் நான் 3 – 4 வருடங்கள் பணியாற்றினேன். அந்த சமயத்தில் அபிஷேக் மட்டுமின்றி நிறைய தரமான இளம் வீரர்கள் இருந்தனர். அவர்களில் அபிஷேக் ஸ்பெஷல் என்று நினைக்கிறேன். அவரின் மேலே யுவ்ராஜ் சிங் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

லாரா பாராட்டு:

“அவருடைய பேட்டின் வேகம், பந்தை அடிக்கும் விதம் நன்றாக இருக்கிறது. தேவைப்படும் போது அவர் ஆலோசனைகளைக் கேட்பதற்காக எனக்கு அழைப்பு கொடுப்பார் என்பது சிறப்பான விஷயமாகும். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படுவதைத் தாண்டி அவர் டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கான வழியைக் கண்டறிய விரும்புகிறார். அப்படி ஒருவர் சிந்திப்பது மிகவும் ஸ்பெஷலானது”

இதையும் படிங்க: கேப்டன் பதவி போனா என்ன? எனக்கு இதுதான் முக்கியம்.. முதன்முறையாக மனம்திறந்த – ரோஹித் சர்மா

“டெஸ்ட் போட்டிகள் எளிதானது கிடையாது. அப்படிப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் அபிஷேக் போன்றவர் தன்னுடைய ஆட்டத்தை முன்னேற்றி வித்தியாசமான லெவலை தொடுவதற்கு முயற்சிப்பதைப் பார்ப்பது சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார். அடுத்ததாக அபிஷேக் ஷர்மா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -