இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதற்கு அடுத்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
கேப்டன் பதவியை விட வெற்றி முக்கியம் : ரோஹித் சர்மா
இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி ரோகித் சர்மா திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு அவரது கிரிக்கெட் கரியர் விரைவில் முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது கேப்டன் பதவி பறிபோன பிறகு முதல் முறையாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோகித் சர்மா மனம் திறந்த சில கருத்துக்களை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் பேசியதாவது :
இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடியதை நினைத்து பெருமை கொள்கிறேன். எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சிறப்பாக விளையாடி என்னை நிரூபிக்க முயற்சிக்கிறேன். நான் கேப்டன் பதவி பறிபோனது குறித்து எல்லாம் பெரிதாக யோசிக்க மாட்டேன்.
கேப்டன் பதவியை காட்டிலும் அணியின் வெற்றி தான் எனக்கு முக்கியம் என்று ரோகித் சர்மா பேசியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் குறித்து பேசுகையில் : ஆஸ்திரேலியாவிற்கு செல்வதும் அங்கு விளையாடுவது என்பதும் எப்போதுமே சவாலான ஒன்றுதான்.
இதையும் படிங்க : 181 ரன்ஸ்.. முஷீர் கானை அடிக்கச் சென்ற பிரிதிவி ஷா.. பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த பின் நடந்தது என்ன?
ஆனாலும் அதனை நாங்கள் மிகச் சிறப்பாக கையாள்வோம். நான் ஆஸ்திரேலியாவில் பல போட்டிகளில் விளையாடியுள்ளதால் நிச்சயம் இம்முறையும் அங்கு சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



