ஐபிஎல் தொடரில் விளையாட இப்படியெல்லாமா பண்ணுவீங்க? இளம்வீரர்களை கடிந்து- பிரையன் லாரா வேதனை

Lara
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் அனைவரையும் மகிழ்விக்க வருகிறது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. மும்பை, புனே ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த தொடருக்கான லீக் சுற்று போட்டிகளை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ தயார் செய்து வருகிறது.

IPL
IPL Cup

வெளிநாட்டு வீரர்கள்:
இந்த தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் மும்பையில் நடைபெற்று வரும் வலைப் பயிற்சிகளில் அந்தந்த அணிகளுடன் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்றிச் நோர்ட்ஜெ டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

- Advertisement -

பொதுவாக ஐபிஎல் தொடர் நடைபெறும் போது ஒருசில நாடுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் என்பதால் தங்கள் நாட்டுக்காக விளையாடுவதற்காக ஒருசில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியிலிருந்து விலகுவார்கள். அந்த வகையில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பட் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் போன்ற வீரர்கள் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு பின்புதான் அந்தந்த ஐபிஎல் அணிகளுடன் இணைந்து விளையாட உள்ளனர்.

தாய்நாட்டை புறக்கணிக்கும் வீரர்கள்:
சமீப காலங்களாக வெறும் 2 மாதங்கள் மட்டும் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுவதால் தங்கள் தாய் நாட்டுக்காக விளையாடுவதை விட இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பல வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வங்கதேசத்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா பங்கேற்று வருகிறது.

- Advertisement -

அதில் முதலில் நடைபெறறு முடியும் ஒருநாள் தொடரில் மட்டும் பங்கேற்று விட்டு அதன் பின் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பதிலாக ஐபிஎல் தொடரில் விளையாட ககிஸோ ரபாடா போன்ற நட்சத்திர தென்ஆப்பிரிக்க வீரர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.

Rabada 1

அது மட்டுமில்லாமல் இதுபோல நிறைய வெளிநாட்டு வீரர்கள் தங்கள் தாய் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட முன்னுரிமை காட்டுகிறார்கள். இதனால் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

வேதனைப்படும் பிரைன் லாரா:
அந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த மகத்தான கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்காக டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்கும் இளம் வீரர்களின் நிலைப்பாடு பற்றி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உங்கள் நாட்டுக்காக விளையாடுவதே உங்களின் முதல் வேலையாக இருக்க வேண்டும். சொல்லப்போனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியதன் காரணமாகத்தான் எனக்கு அதை வைத்து கிரிக்கெட் சம்பந்தமான நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

rabada

அப்படிப்பட்ட நிலையில் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணிப்பதை பார்க்கும் போது எனக்கு ஏமாற்றமாக உள்ளது. எனவே இந்த விஷயத்தில் ஐசிசி தலையிட்டு ஒரு கிரிக்கெட் வீரர் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக தனது நாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்பது போன்ற விதி முறையை உருவாக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஏதாவது ஒன்று செய்தே தீரவேண்டும்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல இன்று டி-20 தொடர்களில் விளையாடி கோடி கோடியாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் முதலில் தங்கள் நாட்டுக்காக விளையாடி அதில் சிறப்பாக செயல்பட்டு பெயரெடுத்ததன் காரணமாகவே இந்த நிலையை அடைந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே தங்களை இந்த அளவுக்கு நட்சத்திரமாக உலகிற்கு அறிமுகப்படுத்திய தங்களின் நாட்டுக்காக விளையாடுவதை முதல் வேலையாகவும் கடமையாகவும் கிரிக்கெட் வீரர்கள் கருத வேண்டுமென பிரைன் லாரா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : ஏலத்துல என்னோட பேரு கடைசியா வந்ததும் பயந்துட்டேன். நல்லவேளை மும்பை வாங்கிட்டாங்க – இந்திய வீரர் நெகிழ்ச்சி

மேலும் தனது தாய் நாட்டுக்காக விளையாடியதன் காரணமாகவே இன்று வர்ணனையாளர், பயிற்சியாளர் போன்ற பல்வேறு வாய்ப்புகளும் வேலைகளும் கிடைப்பதாக ஜாம்பவான் பிரையன் லாரா நன்றி மறவாமல் தனது நாட்டை உயர்த்தி பேசினார். அத்துடன் டி20 போட்டிகளுக்காக கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டை இளைஞர்கள் புறக்கணிப்பது வேதனையை அளிக்கிறது என கூறியுள்ள அவர் இந்த விஷயத்தில் ஐசிசி தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எத்தனையோ வெற்றிகளை பெற்று கொடுத்து ஜாம்பவானாக உருவெடுத்துள்ள பிரையன் லாரா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement