ஏலத்துல என்னோட பேரு கடைசியா வந்ததும் பயந்துட்டேன். நல்லவேளை மும்பை வாங்கிட்டாங்க – இந்திய வீரர் நெகிழ்ச்சி

MI-Auction
- Advertisement -

ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சற்று சறுக்கலை சந்தித்தது. இருப்பினும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலக அளவிலும் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டும் தங்களுக்கு தேவையான சில வீரர்களை ஏலத்தில் எடுத்து தற்போது பலமான அணியை மும்பை இந்தியன்ஸ் கட்டமைத்து வருகின்றது.

Rohith

- Advertisement -

அந்த வகையில் இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் குறிப்பிட்ட சில வீரர்களை மும்பை அணி ஏலத்தில் தேர்வு செய்து வாங்கியுள்ளது. அதன்படி இந்த ஏலத்தில் இந்திய அணியின் வீரரான ஜெயதேவ் உனட்கட்டை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் மும்பை அணி எடுத்திருந்தது.

2010ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஜெய்தேவ் உனட்கட் இதுவரை என்பது 86 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணிக்காகவும் இவர் ஒரு டெஸ்ட் போட்டி 7 ஒருநாள் போட்டி மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

unadkat

இதுவரை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, புனே மற்றும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த சீசனை நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

- Advertisement -

காலம் காலமாக ஐபிஎல் தொடரை ஆட்சி செய்யும் மும்பை அணியில் இப்போது நானும் ஒருவன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. மெகா ஏலத்தின் போது எனது பெயர் கடைசியாக வந்ததைப் பார்த்ததும் கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும் இறுதியில் மும்பை அணியால் நான் வாங்கப்பட்டபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.

இதையும் படிங்க : பழைய சரக்குக்கு எப்போதும் மவுசு அதிகம் – நிரூபித்துள்ள ஐபிஎல் 2022 தொடர் – மெகா ஏலத்தில் நடந்ததை கவனிச்சீங்களா?

சிறு வயது முதலே எனது ரோல் மாடலாக இருந்த ஷேன் பான்ட் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி மேலும் இந்த ஐபிஎல் தொடரில் நான் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உடன் நான் இணைந்து பந்து வீசவுள்ளது கூடுதல் போனஸ் என அவர் சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement