
புனே நகரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி துவங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியா கடைசி வரை போராடியும் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் தோற்றது.
அதன் காரணமாக இத்தொடரை வெல்ல கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் மழையால் வேகத்திற்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்தது தோல்விக்கு முக்கிய காரணமானது. ஏனெனில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா பின்னர் 462 ரன்கள் குவித்து போராடியும் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் பேஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்தைப் போல நாமும் விளையாடலாம் என்று இந்தியா நினைத்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ கூறியுள்ளார். அதனாலேயே பெங்களூருவில் சுமாரான ஷாட்டுகளை அடித்து இந்தியா 46க்கு ஆல் அவுட்டானதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் இங்கிருந்து நியூசிலாந்தை தோற்கடித்து தொடரை இந்தியா வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதே போல அடுத்த மாதம் நடைபெறும் டெஸ்ட் ஆஸ்திரேலிய அணியும் இந்தியா வீழ்த்தலாம் என்று எச்சரிக்கும் பிரட் லீ இது பற்றி பேசியது பின்வருமாறு. “இன்றைய நாளில் மற்றும் வயதில் பவர் ஹவுஸ் அணியாக இருக்கும் இந்தியா தோல்விக்கு அடி பணிய விரும்புவதில்லை. அவர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது தெரியும். ஆஸ்திரேலியாவையும் நியூசிலாந்தையும் எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்”
“போட்டி நாளில் யாரையும் நம்மால் வீழ்த்த முடியும் என்பது இந்தியாவுக்கு தெரியும். உண்மையில் இந்தியா தங்களுடைய வழியை செல்லவில்லை. ஒருவேளை அவர்கள் பேஸ்பால் அணுகுமுறை அல்லது உலகின் மற்ற வீரர்களால் துலக்கப் பட்டிருக்கலாம். தாங்கள் விளையாடிய இந்தியா பெருமையுடன் இருக்க மாட்டார்கள்”
இதையும் படிங்க: 46 அவுட்டையும் ஏத்துக்கோங்க.. இந்திய அணியில் ஃபோரடிக்கும் அந்த விஷயத்துக்கு இடமில்லை.. கம்பீர் பேட்டி
“அவர்கள் சில சுமாரான ஷாட்டுகளை அடித்தனர். சில நேரங்களில் நீங்கள் இன்று பெரிய ஷாட்டுகள் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்து விளையாட வேண்டும். அப்போட்டியில் அவர்கள் பெங்களூருவில் நிலவிய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை வேகமாக புரிந்து கொள்ளவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து தவறிலிருந்து திருந்தி இரண்டாவது போட்டியில் வென்று நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகியுள்ளது.