நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அதனால் அப்போட்டியில் போராடியும் வெல்ல முடியாத இந்தியா 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது.
அதன் காரணமாக விமர்சனங்களை சந்தித்துள்ள இந்திய அணி கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 போட்டிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி ட்ரா நோக்கத்தில் விளையாடுவதில்லை என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதனாலேயே முதல் போட்டியில் டிராவுக்காக விளையாடாமல் இந்தியா வெற்றிக்கு விளையாடியதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் எதுக்கோங்க:
மேலும் சமீபத்தில் கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக அதிரடியாக விளையாடி அசாத்தியமான பெற்ற போது இந்திய அணியை பாராட்டியவர்கள் 46க்கு அவுட்டானது போன்ற தோல்வியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் ட்ரா என்பது போரிங் அடிக்கக்கூடியது. டி20 போட்டிகள் அதிகமாக நடைபெறும் இந்த காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டிராவை நம்மால் பார்க்க முடியாது”
“கிரிக்கெட், விளையாட்டு என்பது மிகப்பெரிய சமநிலையை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களாகும். நாம் கான்பூரில் மகிழ்ச்சியுடன் நாட்களை எதிர்கொண்டிருந்தால் பெங்களூருவில் நடந்ததையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போட்டியில் கடைசி இரண்டரை நாட்களில் பேட்டிங் செய்து ட்ரா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நாங்கள் காட்டவில்லை”
கில், ரிஷப் பண்ட் அப்டேட்:
“சுப்மன் கில் கடந்த போட்டியில் காயத்தால் விளையாடவில்லை. அவர் நல்ல நிலையில் இருக்கிறார். இருப்பினும் அவரை விளையாடும் 11 பேர் அணியில் சேர்ப்பது பற்றி நாங்கள் முடிவு எடுக்கவில்லை. நாளை அணியின் நலனுக்காக தேவையான முடிவை எடுப்போம். நமது அணி வெற்றிக்காக விளையாட செல்லும். ரிஷப் பண்ட் தற்போது நன்றாக இருக்கிறார்”
இதையும் படிங்க: சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அதை தீர்மானிக்க முடியாது.. கேஎல் ராகுல் விமர்சனங்களுக்கு கம்பீர் பதிலடி
“அதனால் அவர் நாளை விக்கெட் கீப்பிங் செய்வார். ஃபிட்னெஸ் பற்றி எந்த கவலையும் இல்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்குகிறது. அதில் சிறப்பாக விளையாடி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. அந்த போட்டியில் கேஎல் ராகுல் நீக்கப்படுவாரா? சிராஜ் விளையாடுவாரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களிடம் காணப்படுகிறது.



