- Advertisement -
உலக கிரிக்கெட்

3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் அந்த இந்திய வீரர்தான் – பிரெட் லீ கருத்து

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி அசத்தியது. 2007-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றிய வேளையில் அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்து இந்திய அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். ஏனெனில் அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சு இந்த தொடரில் மிகச்சிறப்பாக இருந்தது.

- Advertisement -

குறிப்பாக விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமின்றி ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுத்த பும்ராவின் பந்துவீச்சு பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது. இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையிலும் உலகின் மிகச்சிறந்த பவுலராக பும்ரா திகழ்வதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா தான் இருக்கிறார். புதிய பந்தை பயன்படுத்தி அவர் அதிவேகமாக வீசுகிறார் அதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான லைன் மற்றும் லென்த் ஆகியவற்றில் அவர் பந்து வீசுகிறார்.

- Advertisement -

வெள்ளை பந்திலும் அற்புதமாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார். போட்டியின் ஆரம்பத்திலும் அவரை பயன்படுத்தலாம். இறுதி ஓவர்களிலும் அவரை பயன்படுத்தலாம். அதே போன்று அவரை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று ரோகித் சிறப்பாக அறிந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : ரெண்டையும் ஒன்னா கலக்காதீங்க.. எங்களின் நன்மைக்காக இதை செய்ங்க.. இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் கோரிக்கை

பும்ராவின் கிரிக்கெட் கரியர் முன்னேறி வருவதை பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். அவருடன் பணியாற்றியதும் தற்போது அவரைப் பற்றி வர்ணனையில் பேசுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என பிரெட் லீ கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -