- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டிராவிட்டுக்கு வாழ்த்துக்கள்.. அடுத்ததா இந்திய அணி பாதுகாப்பான கைகளுக்கு போயிருக்கு.. பிரட் லீக் பாராடு

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் உலகக் கோப்பை முத்தமிட்டு விடை பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். மேலும் 2024 சீசனில் ஆலோசகராக அவர் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

பாதுகாப்பான கையில்:
அந்த வகையில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ள காரணத்தால் அவரை அடுத்த பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்துள்ளது. இந்நிலையில் கௌதம் கம்பீர் மிகவும் அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் செயல்படக் கூடியவர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் பிரட் லீ பாராட்டியுள்ளார். எனவே அவரைப் பயிற்சியாளராக நியமித்துள்ளதால் இந்திய அணி மிகவும் பாதுகாப்பான கைகளுக்கு சென்றுள்ளதாகவும் பிரெட் லீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீரராக வெல்லாத உலகக் கோப்பையை பயிற்சியாளராக வென்று விடைபெற்ற ராகுல் டிராவிட்டை வாழ்த்திய அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தமக்கு வாய்ப்பு கிடைத்த ஒவ்வொரு முறையும் கௌதம் கம்பீர் சிறப்பாக வேலை செய்துள்ளார். அதற்கு இம்முறை கொல்கத்தா அணியுடன் இணைந்து அவர் ஐபிஎல் கோப்பை வென்றதை எடுத்துக்காட்டாக சொல்லலாம்”

- Advertisement -

“எப்போதும் அவர் ஆட்டத்தின் மேலே இருப்பார். அவர் தன்னுடைய வீரர்களை ஒன்றிணைத்து அணியாக முன்னோக்கி செல்லும் வழியை கண்டறிவார். கண்டிப்பாக அவர் திடமான அடித்தளத்தையும் உருவாக்குவார். சிறந்த வீரரான அவருடைய ஆக்ரோஷம் மற்றும் அதிரடியான அணுகுமுறை இந்தியா வெற்றி பெற உதவும். சர்வதேச அளவில் ஒரு வீரராகவும் கம்பீர் பிரகாசித்துள்ளார்”

இதையும் படிங்க: அடுத்த சூப்பர்ஸ்டாரான அவருக்கு சான்ஸ் கொடுக்கலன்னா அது இந்திய அணியே இல்ல.. ஹர்ஷா போக்லே பாராட்டு

“எனவே தற்போது பயிற்சியாளராக இருப்பதால் இந்தியா பாதுகாப்பான கைகளில் உள்ளது. அதே போல ராகுல் டிராவிட் தன்னுடைய கேரியரை உச்சமாக முடித்ததற்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக இலங்கை மண்ணில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த தொடரில் இருந்து கௌதம் கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -