அடுத்த சூப்பர்ஸ்டாரான அவருக்கு சான்ஸ் கொடுக்கலன்னா அது இந்திய அணியே இல்ல.. ஹர்ஷா போக்லே பாராட்டு

Harsha Bhogle
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு இத்தொடரில் இந்தியா விளையாடியதால் சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இருப்பினும் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா அந்த தொடரை வென்று தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்தது.

குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை பிடித்த பின் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இந்தியா வென்று அசத்தியது. முன்னதாக அந்தத் தொடரில் அறிமுகமாக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 2வது போட்டியில் சதமடித்து இந்தியாவை கம்பேக் கொடுக்க வைத்தார். அதே போல ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற மேலும் சில இளம் வீரர்களும் இத்தொடரில் அசத்தலாக விளையாடினர்.

- Advertisement -

அடுத்த சூப்பர்ஸ்டார்:
இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் அற்புதமாக பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் வருங்கால இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக இருப்பார் என்று பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே பாராட்டியுள்ளார். இருப்பினும் அவருக்கு 5வது போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது போல இதுவரை இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை.

எனவே வருங்காலத்தில் கூட அவருக்கு நிலையான வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் இந்திய அணி வேற்று கிரகத்தில் இருப்பதாக தாம் கருதுவேன் என்றும் ஹர்ஷா போக்லே கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் எங்கிருந்தோ வந்து கடைசி 3 – 4 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்வதை பார்ப்பதாக வைத்துக் கொள்வோம்”

- Advertisement -

“அப்படி அவருடைய பேட்டிங்கை பார்த்து விட்டு இவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் இந்த இந்திய அணி வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக சொல்வீர்கள். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறினார். முன்னதாக சிஎஸ்கே அணியில் கடந்த 5 வருடங்களாக விளையாடி வரும் ருதுராஜ் 2021 ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்று கோப்பையை வெல்ல உதவினார்.

இதையும் படிங்க: லெஜெண்ட்டான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இப்படியா பண்ணுவீங்க.. மெக்கல்லமை விளாசிய டேவிட் லாய்ட்

அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு அசத்தும் அவரது தலைமையில் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. அப்படி அசத்தலாக செயல்படுவதாலேயே தோனியின் நம்பிக்கையை பெற்ற அவர் தற்போது சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே ருதுராஜ் இந்திய அணியின் வருங்கால சூப்பர் ஸ்டாராக இருப்பார் என்று ஹர்ஷா பாராட்டியுள்ளார்.

Advertisement