லெஜெண்ட்டான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இப்படியா பண்ணுவீங்க.. மெக்கல்லமை விளாசிய டேவிட் லாய்ட்

David Llyod
- Advertisement -

இங்கிலாந்தின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 41 வயதில் ஓய்வு பெற்றார். கடந்த 2002ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் வழக்கமான பவுலராகவே வலம் வந்தார். ஆனால் நாளடைவில் தம்முடைய அனுபவத்தால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அவர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து விக்கெட்டுகளை கொத்துக் கொத்தாக அள்ளினார்.

குறிப்பாக 30 வயதுக்கு பின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவர் அதிக விக்கெட்டுகளை எடுத்து கிளன் மெக்ராத்தை மிஞ்சினார். மேலும் ஹர்திக் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட பல வீரர்கள் 35 வயதுக்குள்ளையே கடினமான கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டனர். ஆனால் 40 வயதை கடந்தும் தம்முடைய அற்புதமான ஃபிட்னஸ் காரணமாக அசத்திய ஆண்டர்சன் 188 போட்டிகளில் விளையாடினார்.

- Advertisement -

வழுக்கட்டாய ஓய்வு:
அதனால் சச்சினுக்கு பின் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்த அவர் 704 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அப்படிப்பட்ட மகத்தான ஆண்டர்சன் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் கூறியிருந்தார்.

ஆனால் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் 2025 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த அதிரடியான அணியை கட்டமைக்க விரும்புகிறார். எனவே 41 வயதை தாண்டி விட்ட நீங்கள் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுங்கள் என்று ஆண்டர்சனிடம் அவர் நேரடியாக சொல்லி விட்டார். அதற்கு இங்கிலாந்து வாரியமும் அணி நிர்வாகமும் ஆதரவாக இருந்ததால் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் வலுக்கட்டாயமாக ஓய்வு பெற்றார்.

- Advertisement -

இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சனை வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்த ப்ரெண்டன் மெக்கல்லமை முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் விமர்சித்துள்ளார். இது பற்றி டெய்லி மெயில் பத்திரிக்கையில் அவர் கூறியது பின்வருமாறு. “ஒரு மகத்தானவர் விடை பெற்றார். ஆண்டர்சன் வெளியேறியதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர் இப்போதும் எப்போதும் போல சிறப்பாக பந்து வீசுகிறார்”

இதையும் படிங்க: விராட் கோலியால் 2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கிடைப்பது கஷ்டம்.. மிஸ்ரா விமர்சனம்

“துல்லியம், வேகம், சகிப்புத்தன்மை ஆகிய அனைத்து குணங்களையும் கொண்டுள்ள அவர் இப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஷஸ் தொடரை மனதில் வைத்து அவர்கள் இதை நகர்த்தியுள்ளனர். அதற்காக சிறந்த அணியை தேர்ந்தெடுக்க விரும்புவதால் வயதின் காரணமாக ஆண்டர்சன் வெளியேற்றப்பட்டார். வாசகரே நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதைச் செய்தது என் கழுதை என்று எனக்கு தெரியும்” எனக் கூறினார்.

Advertisement