IPL 2023 : வேணும்னா பாருங்க இந்த வருடத்துடன் தோனி ரிட்டையர் ஆகமாட்டாரு – பிரட் லீ கூறும் காரணம் இதோ

Lee
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2008 முதல் 4 கோப்பைகளை வென்று நிறைய போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த எம்எஸ் தோனி இந்த சீசனிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இன்னும் சில மாதங்களில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

CSK vs KKR

- Advertisement -

குறிப்பாக தன்னை தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்களின் மீதிருக்கும் பாசத்தால் தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று ஏற்கனவே தோனி தெரிவித்திருந்தார். அதற்கேற்றார் போல் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து தற்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதால் இதுவே அவருடைய கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரட் லீ நம்பிக்கை:
சொல்லப்போனால் தம்முடைய கேரியரின் கடைசி பகுதியில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக தெரிவித்த தோனி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா அணியை மிஞ்சும் அளவுக்கு தமக்கு ஆதரவு கொடுத்த கொல்கத்தா ரசிகர்கள் தாம் ஓய்வு பெறுவதை உணர்ந்து முன்கூட்டியே வழியனுப்ப முயற்சித்ததற்கு மனதார நன்றி பாராட்டினார். அந்த கருத்துக்கள் இந்த வருடத்துடன் அவர் ஓய்வு பெறுவதை அவரே உறுதிப்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது.

MS Dhoni 1

இருப்பினும் இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று வரலாற்றின் மகத்தான விக்கெட் கீப்பர் கேப்டன் பேட்ஸ்மேனாக சாதனை படைத்த தோனி 2019ஆம் ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் விடைபெற்றதால் குறைந்தபட்சம் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பார்க்க அனைவரும் விரும்புகிறார்கள். இந்நிலையில் ஒரு போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் ஓய்வு பெற்று மற்றொரு இன்னிங்ஸில் விளையாட உதவும் இம்பேக்ட் வீரர் விதிமுறை 42 வயதை கடந்தாலும் தோனி தொடர்ந்து விளையாடுவதற்கு உதவுமென்று முன்னாள் வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டில் அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை எங்கு விளையாடினாலும் தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும் அவருடைய ரசிகர்கள் அதை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அந்த ஆர்வம் கிரிக்கெட்டில் வரவேற்கக் கூடியது. குறிப்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மஞ்சள் உடை அணிந்து தோனிக்காக ஆதரவு கொடுத்தனர். அது மிகவும் ஆரோக்கியமானது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் தோனி போன்ற ஒரு மகத்தானவருக்காக ஆதரவு கொடுக்கிறார்கள்”

Lee

“இந்த சீசனில் அவர் விளையாடும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எனவே இந்த வருடம் அவருக்கு கடைசியா இல்லையா என்பதை நீங்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது வந்துள்ள இம்பேக்ட் விதிமுறை அவர் இன்னும் 1 அல்லது 2 வருடங்கள் மேற்கொண்டு விளையாடுவதற்கு பெரிய உதவி செய்யும். அதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். இந்த விதிமுறை கூட கிரிக்கெட்டுக்கு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். அது சொந்த ஊர் மற்றும் வெளியூர் என்ற தாக்கத்தை ஏற்படுத்தாமல் போட்டியில் ஏற்படும் மோதலை இன்னும் வலுவாக்குகிறது”

இதையும் படிங்க:CSK : சி.எஸ்.கே அணிக்காக அவர் ஆடற ஆட்டத்தை பாத்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு – பிராவோ பேட்டி

“மே 28இல் தோனியை ஐபிஎல் தொடரில் நாம் பார்ப்பது கடைசியாக இருக்காது என்று நான் நம்புகிறேன். அவர் இன்னும் ஒரு வருடம் விளையாடுவார் என்று நம்புகிறேன். அத்துடன் தோனி மற்றும் சென்னையை பொறுத்த வரை இளம் வீரர்களை அவர்கள் குடும்பத்தை போல் நடத்துவது சிறப்பானது. குறிப்பாக துஷார் தேஷ்பாண்டே போன்ற இளம் வீரர்கள் தோனி தலைமையில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று தேர்ந்து வருவதைப் போல் முதிர்சியடைந்து வெளியே வருகிறார்கள். இந்த வருடம் அவருடைய கேப்டன்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது. அந்த வகையில் மிகச் சிறந்த கேப்டனான அவர் பலரின் ரோல் மாடலாக திகழ்கிறார்” என்று கூறினார்.

Advertisement